ஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம்

kaali-compressed

மானிடராய் பிறந்த அனைவருக்கும் அழகின் மீது எப்போதும் சற்று ஆர்வம் அதிகம் தான். அழகோடு சேர்ந்து வசீகரிக்கும் முகத் தோற்றத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நமது எதிரிகள் கூட நம்மை பார்த்த மாத்திரத்தில் நம்பர்களாக மாறும் அளவிற்கு முகத்தில் வசீகரம் ஏற்படும். இதோ அந்த அற்புதமான மந்திரம்.

om manthiram

மந்திரம்:
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம்
திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி
என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும்
லட்சுமணரும் போலே அம்மா தாயே

லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே
சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர
அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து
பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே
சுவாகா.

இதையும் படிக்கலாமே:
நம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்

இந்த மந்திரத்தை முதன் முதலில் ஒரு நிறைந்த பௌர்ணமி அன்று 108 முறை கூறுவது சிறந்தது. அதன் பின் தினமும் 21 முறை கூறி வர நம்மை அறியாமலேயே நம் முகமானது பிரகாசிக்க ஆரமிக்கும். இதன் மூலம் நம்மை காணும் அனைவருக்கும் நம் மீது ஒரு அளவுகடந்த மரியாதை ஏற்படும். எல்லோரும் நம்மிடம் பழக விரும்புவர்.