உங்கள் முகம் நடிகைகளின் முகம் போல் எப்பொழுதும் பளபளவென்று இருக்க இந்த ஒயிட்னிங் ஆயிலை தினமும் இரவில் இரண்டு சொட்டு மட்டும் முகத்தில் தடவினால் போதும்

skin
- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாகவே இருக்கும். எப்பொழுதும் மற்றவரை பார்க்கும் பொழுது அவர்கள் நம்மை விட அழகாக இருக்கிறார்களா? இல்லை நாம் தான் அவர்களை விட அழகா என்று முறையிட்டு பார்ப்போம். அவ்வாறு நமது அழகின் மீது நமக்கு அதிக அளவு கவனமும், ஆர்வமும் இருக்கும். இவ்வாறு அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் எப்போதும் தங்கள் முகத்தின் பளபளப்பு குறையாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் வெளியில் வேலைக்குச் சென்று வருவதாக இருந்தாலும் சரி, வீட்டில் வீட்டு வேலைகளை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி நமது முகம் எப்பொழுதும் எண்ணெய்ப் பிசுக்கும், நிறம் குறைவாகவும் காணப்படும். ஆனால் சினிமா நடிகைகள் மற்றும் பியூட்டி பார்லரில் இருப்பவர்களின் முகம் அனைத்தும் எப்பொழுதும் ஒருவித பளபளப்புடன் தான் இருக்கும். இவ்வாறு நமது முகமும் பளிச்சென்று இருக்க இந்த எளிமையான ஆயிலை நீங்களே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

நமது உடலில் வெளியில் தெரியும் பகுதிகளில் தான் அதிகம் வெயிலில் பாதிக்கப்படுகின்றன. அதிலும் நமது முகம் நேரடியாக சூரிய ஒளியில் அதிக நேரம் படுகிறது. எனவே முகம், கழுத்து, கை போன்ற பகுதிகள் தான் எப்பொழுதும் நமது உடலின் நிறத்தை விட சற்று நிறம் குறைவாக காணப்படும். இதற்காக எப்போதும் தனி கவனம் எடுத்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

எனவே எப்பொழுதும் வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஏனென்றால் முகத்தில் ஒட்டி இருக்கும் அழுக்குகள் நமது தோலின் உட்புறம் சென்று விட்டால் அவை உங்களுக்கு முகப்பருக்களை உண்டாக்கும். அல்லது முகத்தில் ஆங்காங்கே கருமை நிறமாக மாறிவிடும்.

ஒரு சிலர் இவற்றைத் தொடர்ந்து செய்வதில்லை. எனவே அவர்களின் முகத்தில் அதிக அளவு கருமை படிந்து காணப்படும். இதற்காக இந்த கருமை நிறம் நீங்குவதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது பெரிய அளவிலான 2 முழு காரட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை காய் துருவல் பயன்படுத்தி பொடியாகத் துருவி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு 20 கிராம் தேங்காய் எண்ணையை ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் லேசாக காய்ந்ததும் துருவிய கேரட்டை இதில் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் சிறிது நேரம் சத்தத்துடன் பொறிந்து கொண்டே இருக்கும். இதன் சத்தம் அடங்கி லேசாக எண்ணெய் கொதித்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பிறகு இந்த எண்ணெயை சிறிது நேரம் ஆற வைக்கவேண்டும். பிறகு ஒரு பாட்டிலில் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி எண்ணையை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனை இறுக்கமாக மூடி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தினமும் இரவு படுக்க செல்லும் முன் இந்த எண்ணெயிலிருந்து 2 சொட்டு எடுத்து முகத்தில் லேசாக மசாஜ் செய்தவாறு தடவி விட்டால் போதும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் மிகவும் வெண்மையாக மாறி பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -