- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவெறும் கைப்பிடி ரோஜா இதழ் இருந்தா போதும் முகத்தை பளிச்சென்று பள பளப்பாக மாற்ற இப்படி...

வெறும் கைப்பிடி ரோஜா இதழ் இருந்தா போதும் முகத்தை பளிச்சென்று பள பளப்பாக மாற்ற இப்படி ட்ரை பண்ணி பாருங்க. நல்ல பட்டு போல பிரகாசமான அழகை பெற செலவே இல்லாத ரொம்ப சுலபமான வழி.

- Advertisement -

நம் முகம் எப்போதும் பார்க்க பிரகாசமாக, பளிச்சென்று இருக்க வேண்டும் என நினைக்காதவர்கள் யாருமே கிடையாது. இதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சமம் தான். இப்படியான அழகை பெறுவதற்கு கடைகளில் கிடைக்கும் விலை அதிகமான கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி தான் முகத்தை அழகுப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. செலவே இல்லாமல் ஒரே ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை வைத்து முகத்தை பளிச்சென்று மாற்ற முடியும். வாங்க அது எப்படி என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகத்தை வெள்ளையாக்கும் டோனர் தயாரிக்கும் முறை:
எந்த டோனர் தயாரிக்க முதலில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் பாத்திரம் வைத்து நல்ல சுத்தமான குடிநீரை அரை லிட்டர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது சுத்தம் செய்து வைத்த ரோஜா இதழ்களை அதில் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அது கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை 8 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள். ரோஜா இதழ்களில் இருக்கும் எசென்ஸ் முழுவதுமாக தண்ணீரில் இறங்கி தண்ணீர் நல்ல பிங்க் நிறத்திற்கு மாறியிருக்கும். இந்த தண்ணீரை ஒரு பவுலில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள் . இத்துடன் ஒரு ஸ்பூன் சுத்தமான ஆளுவேரா ஜெல் வாங்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு வேளை உங்களுக்கு கடைகளில் கிடைப்பதை வாங்கி சேர்க்க விருப்பம் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் இயற்கையான ஆலிவேரா ஜெல்லை சேர்ப்பதாக இருந்தால் ஆலுவேரா ஜெல் சேர்த்த பிறகு வடிகட்டிக் கொள்ளுங்கள். அப்போது தான் இதை ஸ்பிரே செய்யும் போது பாட்டிலில் அடைக்காது.

- Advertisement -

இப்போது ரோஜா இதழும், ஆலுவேரா ஜெல்லும் கலந்த இந்த தண்ணியை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்து விடுங்கள். இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் முகத்தில் அடிக்கடி ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். ஸ்பேரே செய்த பிறகு முகத்தை துடைக்காமல் அப்படியே விட்டு விடுங்கள். இரவில் உறங்க செல்லும் போது மட்டும் முகத்தை நன்றாக அலம்பி விட்டு இதை ஸ்பிரே செய்து அப்படியே விட்டு விடுங்கள்

இந்த முறையை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் முகம் பளபளப்பாக மாறி வெள்ளையாக மாறுவதுடன், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருத்திட்டு, கருவளையம் அனைத்தும் மறைந்து விடும். இதைத் முறையை தொடர்ந்து பயன்படுத்துவதனால் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகப்பரு வருவதையும் இது தடுத்து விடும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கக்கூடிய இந்த 2 பொருளில் கருப்பா இருக்கிற உங்க முகம் 10 நிமிடத்திலேயே வெள்ளையாக மாறிவிடும் தெரியுமா? இது தெரிஞ்சா எப்பவோ ட்ரை பண்ணிருப்பீங்க!

இந்த எளிய அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் வீட்டில் இந்த ஸ்ப்ரேவை தயார் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தி பாருங்கள். முக அழகிற்காக அதிக செலவு செய்யாமல் இது போல சின்ன சின்ன வழிகளில் நாம் இயற்கையான முறையில் நம்முடைய அழகை பராமரித்துக் கொள்ளலாம். இதை ஆண்களும் பயன்படுத்தலாம் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்