- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகப்பருக்கள் நீங்கி சருமம் பளபளக்க

முகப்பருக்கள் நீங்கி சருமம் பளபளக்க

- Advertisement -

பதின் வயது முதல் தோன்றக்கூடிய இந்த முகப்பருக்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் காலம் முழுதும் மாறா வடுவாக நம் முகத்திலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. எரிச்சலையும், வலியையும் உண்டாக்கக்கூடிய முகப்பருக்களை கூட நெருங்க விடாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு உண்டு. அவை என்னென்ன? அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகத்தில் இருக்கக்கூடிய மெல்லிய திறந்த துவாரங்கள் வழியாகத் தான் முகப்பருக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உண்ணும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றின் காரணமாக முகப்பருக்கள் ஆரம்பத்தில் உருவாகின்றன. தொடர்ந்து இந்த சூழல் அவைகளை வலுப்பெற செய்து வடுக்களாக மாறவும் வழி வகுக்கின்றன. உண்ணும் உணவு மற்றும் முகப் பராமரிப்பு இவற்றில் இருந்து விடுபட உதவும்.

- Advertisement -

நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டு முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் நம் உணவு பழக்க வழக்கத்தை சற்றே மாற்றி அமைக்க வேண்டும். நீர் சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் 4 லிட்டர் தண்ணீர் ஆவது பருகுவது அவசியமாகும்.

மாவுச் சத்துள்ள பொருட்கள் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவு பண்டங்கள், அதிகப்படியான நெய் கலந்த உணவுகள், கொழுப்பு சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலில் தங்கியுள்ள இத்தகு அதிகப்படியான கொழுப்பு படிமங்கள் வெளியேற முடியாமல் நம் முக துவாரங்கள் மூலமாக வெளியேற செய்து அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுக்களை எளிதாக ஈர்த்து முகப்பருகளை உருவாக்குகிறது.

- Advertisement -

உணவு முறை பழக்கவழக்கம் மட்டும் அல்லாமல் சருமத்தையும் பராமரிப்பது அவசியமாகும். சருமத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரினால் முகத்தை மென்மையாக கழுவி வர முகப்பருக்களுக்கு நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும். அடுத்ததாக முகத்தை நீங்கள் ஒவ்வொரு முறை சோப்பு போட்டு கழுவியப் பின்னர் டோனிங் செய்ய வேண்டும். டோனிங் செய்வதால் மட்டுமே முகப்பருக்களை அடியோடு கட்டுப்படுத்த முடியும்.

வீட்டில் இருக்கும் இயற்கை டோனர்கள்:

முகம் கழுவிய பின்னர் உங்களின் சருமத்திற்கு ஏற்ற டோனரை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக வீட்டில் இருக்கக்கூடிய இந்த சில பொருட்கள் சிறந்த டோனராக செயல்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அரிசி கழுவிய தண்ணீர், சுத்தமான ரோஜா இதழ்களால் தயாரிக்கப்பட்ட பன்னீர், புதினா ஜூஸ், துளசி சாறு, கற்றாழை சாறு, தேன், வெள்ளரி சாறு, எலுமிச்சை சாறு, ஆரஞ்சு தோல் சாறு போன்றவை இயற்கை டோனராக செயல்படும்.

இதையும் படிக்கலாமே:
நேந்திர பழ ஜாமுன் செய்முறை

நீங்கள் ஒவ்வொரு முறை முகம் கழுவிய பின்பு இவற்றிலிருந்து ஏதாவது ஒரு சாற்றை நான்கிலிருந்து ஐந்து சொட்டுக்கள் வரை எடுத்து பஞ்சால் நனைத்து முகத்தை அழுந்த துடைக்க வேண்டும். பின்னர் நன்கு உலரவிட்டு விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சரும துவாரங்கள் மெல்ல மெல்ல இருக ஆரம்பித்து பின் மறையும். மேலும் சருமம் மாசுக்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு இயற்கையாகவே பளபளவென்று பளிங்கு போல மாறும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கும் ஈரப்பதம் பராமரிக்கப்பட்டு சருமம் இயற்கையான முறையில் மிருதுவான தன்மையுடன் வைத்திருக்க உதவும்.

சற்று முன்