போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்தது போல உணர்கிறீர்களா? அப்டின்னா இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்! துன்பங்கள் ஒழியும்.

சில சமயங்களில் அதிகமான துன்பங்கள், தோல்விகள், அவமானங்கள் வரும் பொழுது நமக்குள் ஒரு கேள்வி எழும். போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்திருக்கிறோம் போலிருக்கிறதே! அதனால் தான் இந்த ஜென்மத்தில் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்று தோன்றும். இப்படி முன்ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக தான் இந்த ஜென்மத்தில் கஷ்டப்படுகிறோம் என்று உங்களுக்கு தோன்றும் பொழுது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

sad-crying4

இப்போது இருக்கும் வாழ்க்கையில் நாம் யாருக்கும் எந்த தீங்கும் செய்திருக்க மாட்டோம் ஆனால் நமக்கு வருவது எல்லாம் துன்பமாகவே அமைந்துவிடும். கைக்கு எட்டியது வாய்க்கு கிடைக்காது என்பது போல கிடைக்கும் வாய்ப்புகளை கைநழுவ விட்டு விடுவோம். எதை எடுத்தாலும் அதில் தோல்விகள், அவமானங்கள் என்று பல இடங்களில் துன்பப்பட நேரிடும். என்றாவது ஒரு நாள் நம் வாழ்க்கை மாதிரி விடாதா? அல்லது இப்படியே தான் நம் வாழ்க்கை கடந்து விடுமோ! என்கிற பயம் மனதை தொற்றிக் கொள்ளும்.

இன்று மாறி விடும், நாளை மாறிவிடும் என்று கடைசியில் அதுவே பழகிவிடுமோ என்கிற பயம் வந்துவிடும். இப்படிப்பட்ட பயங்களை தவிர்க்க இறைவனை பரிபூரணமாக சரணடைவது ஒன்றே தீர்வாக இருக்கும். நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு தண்டனையை இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தீராத நோய் பாதிப்புகள் இருக்கும். அவரவர் செய்த கர்ம வினையின் படியே அவர்களுக்கு தீராத நோய்களும், அடையாத கடன்களும் இந்த ஜென்மத்தில் கடவுள் கொடுத்து விடுவார். இப்படி தீர்க்கவே முடியாத பிரச்சினைகளுக்கு கூட தீர்வை தரும் வழிபாடு குலதெய்வ வழிபாடு ஒன்றுதான். அதை முறையாக செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

medicine

எத்தனையோ தீர்க்க முடியாத, முடிவுக்கு வராத நோய்களும், கடன்களும் கர்ம வினையால் ஏற்படுபவை தான். இவைகள் தீர குலதெய்வ வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி அன்றும் குலதெய்வ வழிபாடு செய்வது உத்தமம். அதுபோல் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் முடியாத பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நல்ல வழி பிறக்கும். குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் மண் கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் உங்கள் குலதெய்வ மந்திரத்தை சொல்லி ஆவாகனம்(எழுந்தருள) செய்ய வேண்டும்.

பின்னர் உங்களுடைய மனக்குறைகளை பிரார்த்தனைகளாக வைத்து குலதெய்வத்திற்கு உகந்த சர்க்கரை பொங்கலை நிவேதனம் படைத்து தீபாராதனை காண்பிக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்யும் பொழுது நெய் தீபம் ஏற்றுவது தான் சிறந்தது. ஒவ்வொரு வருடமும் குலதெய்வ கோவிலுக்கு சென்று செலுத்த வேண்டிய காணிக்கைகளை தவறாமல் செலுத்தி வர வேண்டும். பௌர்ணமி தினத்தில் வீட்டில் குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

kula-dheivam

இப்படி தவறாமல் செய்து வந்தாலே முன்ஜென்ம பாவ வினைகள் அத்தனையும் நீங்கி எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். வளர்பிறை அல்லது தேய்பிறை பவுர்ணமி எந்த பௌர்ணமியிலும் இதை செய்யலாம். பவுர்ணமி தினத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்வது மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் நல்ல பலன்களைக் கொடுக்கும். மேலும் கடன் தீர தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்வதும் சிறந்த பரிகாரமாக அமையும்.