- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் விநாயகர் மந்திரம்

வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் விநாயகர் மந்திரம்

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தியும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது. இன்றைய நாளில் நாம் அனைவரும் கண்டிப்பாக முறையில் விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்ய வேண்டும். அவர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வீட்டிலோ அல்லது ஆலயத்திலையோ வழிபாடு செய்யலாம். இவர்கள் இருவரின் அருளையும் ஒருசேர பெற்று வாழ்க்கையில் பலவிதமான முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று இரவுக்குள் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முன்னேற்றத்தை தரும் மந்திரம்

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் என்பது வரும். அதேபோல் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியும் வரும். இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து வரக்கூடிய நாள் மிகவும் அரிதாகவே நடைபெறும். அப்படி அரிதாக இருக்கக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது. இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய விநாயகர் வழிபாடாக இருந்தாலும் சரி முருகப்பெருமானின் வழிப்பாடாக இருந்தாலும் சரி அதற்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான மந்திர வழிபாடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் விலக்கி முன்னேற்றத்தை தரும்.

- Advertisement -

இந்த சூட்சுமமான வழிபாட்டு முறையை இன்று இரவு 12 மணிக்குள் செய்துவிட வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு இருந்தால் போதும். துவரம் பருப்பு என்பது செவ்வாய் பகவானுக்குரிய தானியம் என்றும் செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக முருகப்பெருமான் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதனால் நாம் சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருக்கும் துவரம் பருப்பை கூட ஒரு கைப்பிடி அளவு எடுத்து இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி விநாயகப் பெருமானின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை நிறுத்தி நிதானத்துடன் கூறிக்கொண்டே ஒரு முறை எழுத வேண்டும். எழுதி முடித்த பிறகு இந்த பேப்பருக்கு நான்கு மூலைகளிலும் மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரை நான்காக மடித்து துவரம் பருப்பின் மேல் வைத்துவிட்டு முழு மனதோடு விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு அன்று இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். சனிக்கிழமை அன்று காலையில் எப்பொழுதும் போல் தீபம் ஏற்றும் பொழுது இந்த துவரம் பருப்பையும் அந்த மந்திரம் எழுதிய பேப்பரையும் ஒரு சிறிய டப்பாவில் போட்டு மூடி போட்டு பூஜை அறையிலோ அல்லது சமையலறிலோ வைத்து விட வேண்டும். மூன்று மாதங்கள் வரை இது அப்படியே இருக்கட்டும். மூன்று மாதங்கள் நிறைவடைந்த பிறகு இவை இரண்டையும் ஓடுகின்ற தண்ணீரில் விட்டுவிட்டு மறுபடியும் ஒரு சங்கடஹர சதுர்த்தி வரக்கூடிய நாளில் இதே சூட்சுமண வழிபாட்டை செய்து வைக்கலாம்.

மந்திரம்

” ஓம் ஸ்ரீம் க்ரீம் க்ளீம் க்லௌம் கங் கணபதயே வரவரத சர்வ ஜனமே வசமானய ஸ்வாஹா “

இதையும் படிக்கலாமே: நலம் தரும் அரசமரம்

எளிமையான இந்த சூட்சும வழிபாட்டை முழு மனதோடு இன்று விநாயகரின் முருகப்பெருமானையும் நினைத்து செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்