முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வதுதான் அமாவாசை திதி வரக்கூடிய நாள். அதிலும் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை அன்று மறவாமல் முன்னோர்களை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அவர்களின் அருளும் ஆசீர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட முன்னோர்களின் அருள் ஆசிர்வாதமும் நமக்கு கிடைத்துவிட்டாலே நம்முடைய வாழ்க்கையில் பல விதமான நன்மைகள் உண்டாகும். இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அப்படிப்பட்ட முன்னோர்களின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த ஒரு எளிமையான தீப வழிமுறையை பின்பற்றுவது அதீத பலனை தரும். அந்த தீபத்தை எந்த நேரத்தில் எங்கு ஏற்ற வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முன்னோர்கள் அருளை பெற தீபம்
முன்னோர்களை நாம் மறவாமல் மாதத்திற்கு ஒருமுறையாவது நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யாவிட்டால் முன்னோர்களின் தோஷம் நமக்கு ஏற்படும். முன்னோர்களின் தோஷம் நமக்கு ஏற்பட்டு விட்டால் நமக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது, காரிய தடைகள் உண்டாகி கொண்டே இருக்கும், சுபகாரியங்கள் எதுவும் நல்ல விதத்தில் நடைபெறாது, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் மறவாமல் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.
ஆடி அமாவாசை நாளன்று பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். வீட்டில் முன்னோர்களுக்காக சமைத்து படையல் இட்டு காகத்திற்கு உணவும் அளிப்பார்கள். இன்னும் சிலரோ பசு மாட்டிற்கு உணவளிப்பது, தங்களால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது என்று பல விதங்களில் முன்னோர்களின் அருளை பெறுவதற்காக முயற்சி செய்வார்கள். இந்தோடு சேர்த்து இந்த ஒரு தீபத்தையும் ஏற்றி வைத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் முன்னோர்களின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இந்த தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் முன்னோர்களின் மனம் குளிரும். அவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும், காரிய தடைகள் விலகும், கண் திருஷ்டி போன்ற தோஷங்கள் நீங்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள் விலகும், காரிய வெற்றி உண்டாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தீபத்தை ஆடி அமாவாசை நாளான ஜூலை மாதம் 24 ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரமான காலை 3:30 மணியிலிருந்து 5:30 மணிக்குள் அரை மணி நேரம் எறிவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் வெற்றிலை அல்லது வாழை இலை அல்லது அரச இலை என்று ஏதாவது ஒரு இலையை வைத்து அதற்கு மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு வீட்டு நிலை வாசலுக்கு வெளியே வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அரை மணி நேரம் இந்த தீபம் எரிந்த பிறகு அதை வீட்டிற்குள் எடுத்து வந்து குளிர வைத்து விடலாம். இப்படி இந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றுவதன் மூலம் நம் வீடு தேடி வரக்கூடிய முன்னோர்கள் மனமகிழ்ந்து நமக்கு நன்மைகளை செய்வார்கள்.
இதையும் படிக்கலாமே: உப்பு சாஸ்திரம்
முன்னோர்களை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றுபவர்களுக்கு முன்னோர்களின் அருள் பரிபூரணமாக கிடைத்து அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.