கடலுக்கு நடுவில் பிரமாண்ட சிவன் கோவில் – வீடியோ

Sivan temple

ஆச்சர்யமான கோவில் கட்டிடங்களுக்கு பேர் போனது இந்தியா. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் பிரம்மாண்டத்தின் உட்சமாகவே திகழ்கிறது. அந்த வகையில் மூன்று புறமும் கடல் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சிவன் கோவில் பற்றிய வீடியோ இதோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

கர்நாடக மாநிலம் அரபிக்கடலோர பகுதியில் அமைந்துள்ள ஊர் முருதீசுவர். இந்த ஊரில் தான் மிக பிரமாண்டமான இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் முருதீசவரன் என்று போற்றப்படுகிறார். இந்த கோவின் கோபுரமானது 20 மாடிகளை கொண்டு பிரமாண்டமாக உள்ளது. இதன் உயரம் 237.5 அடி ஆகும். அதோடு இங்கு 123 அடியில் மிக பிரமாண்டமான சிவன் சிலை உள்ளது.

இங்குள்ள கோபுரத்தின் உச்சிக்கு சென்று சிவன் சிலையை நாம் பார்க்கலாம். அதற்காக லிப்ட் வசதியும் இங்கு உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை இந்த கோவிலில் தான் உள்ளது. அதை தான் நாம் மேலே உள்ள வீடியோ பதிவில் கண்டோம். இந்த கோவிலானது சற்று தாழ்வான இடத்தில் இருந்தாலும் அந்த ஊரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் சிவனை தரிசிக்கும் வண்ணம் கோவில் வடிவமைக்க பட்டுள்ளது.