முக வசீகரம் பெற உதவும் முருகன் துதி

Lord-Murugan-1-1

“அகத்தின் கண்ணாடி முகம்” என்பது உண்மையான ஒரு பழமொழியாகும். நம் மனதில் உதிக்கும் எத்தகைய எண்ணங்களையும் நாம் மறைக்க நினைத்தாலும் நம் முகம் காட்டிக்கொடுத்து விடும். ஒவ்வொருவரின் முகத்தில் வசீகரத்தன்மை இருக்கும் பட்சத்தில், அந்நபரை அனைவருக்கும் பிடிக்கும். அதனால்அவருக்கு பல அனுகூலங்கள் கிடைக்கிறது. ஆனால் நமது உடலை சுற்றி இருக்கும் சக்தி உடல்களில் தங்கியிருக்கும் தீய அதிர்வுகள் காரணமாக முகம் வசீகரத்தன்மை இழக்கிறது. இழந்த அந்த முக கவர்ச்சியை மீண்டும் பெற இந்த முருகனுக்குரிய துதியை பாட வேண்டும்.

Murugan

முருகன் துதி

மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!

எக்காலங்களிளும் அழைத்தவுடன் வந்து உதவுபவர் வேலவனாகிய முருக பெருமான். அவரை போற்றும் இத் துதிகளை செவ்வாய் கிழமைகளில் காலை அல்லது மாலை வேளையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கோ அல்லது முருகன் சந்நிதிகோ சென்று, விளக்கெண்ணை அல்லது நெய் தீபமேற்றி இந்த துதி பாடலை 9 முறை பாடி முருகனை வணங்க உங்கள் முகத்தில் இருக்கும் துரதிஷ்டத்தன்மை நீங்கி பிறருக்கு உங்களிடம் ஒரு வசீகரம் உண்டாகும். உங்கள் சக்தி உடல்களில் இருக்கும் தீய அதிர்வுகள் நீங்கி உங்களுக்கு உடல்நலத்தையும், அதிர்ஷ்டத்தையும் உண்டாகும்.

Lord Murugan

“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது ஒரு தமிழ் ஞானி இயற்றிய பாடலில் வருகிற ஒரு வரியாகும். அதாவது மனிதனின் உடலில் எத்தனை வகையான உறுப்புக்கள் இருந்தாலும், சிரசு எனப்படும் தலையே அனைத்தையும் விட முக்கியமானதாகும். அந்த தலையில் ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக்காட்டுவதும், பார்க்கும் போது பிறரை கவர்வது முகம். நமக்குள் எழும் கீழான எண்ணங்களால் முகம் பொலிவிழப்பது மட்டுமில்லாமல், பிறருக்கு நம் முகத்தை பார்த்தாலே இனம் புரியாத ஒரு வெறுப்பும், அதிர்ஷ்டமின்மையையும் உண்டாக்குகிறது. அழகனாகிய முருகனின் இந்த துதிகளை கூறி வழிபடுவதால் மேல கூறப்பட்ட கெடுதலான விடயங்கள் நீங்கி நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
புதிதாக எந்த ஒன்றையும் விரைவில் கற்று வெற்றிபெற குரு மந்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரம், துதி என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we have Murugan thuthi in Tamil. It can also be called as Murugan thuthi padal in Tamil or Murugan thuthi padalgal lyrics in Tamil. It is powerful Thuthi of Lord Murugan.