- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுருகனின் வசியம் மந்திரம்

முருகனின் வசியம் மந்திரம்

- Advertisement -

கலியுக தெய்வமாக கருதக்கூடியவர் முருகப்பெருமான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவரும் முருகப்பெருமான்தான். முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் எந்த வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முருகனுக்கு உரிய நட்சத்திரம், முருகனுக்கு உரிய திதி, முருகனுக்குரிய கிழமை இவற்றில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் வேண்டிய வரம் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தை பாக்கியம், திருமண தடை, வேலை தொடர்பான பிரச்சனைகள், கடன் தொடர்பான பிரச்சனைகள் என்று வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய பல முக்கியமான பிரச்சனைகள் தீர்வதற்கு முருக பெருமான் வழிபாடு என்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு முருகப்பெருமானை வசியம் செய்யக்கூடிய ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகனின் வசியம் மந்திரம்

முருகப்பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. பல விதங்களில் முருகப் பெருமானை நினைத்து பல சித்தர்கள் கூறிய மந்திரங்களும் இருக்கின்றன. இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அந்த மந்திரங்களுக்கு உரிய பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக சிவபெருமானுக்குரிய மந்திரமாக பஞ்சாட்சர மந்திரம் திகழ்கிறது. அந்த பஞ்சாட்சர மந்திரத்தை நாம் கூறினோம் என்றால் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

- Advertisement -

அதே போல் தான் முருகப்பெருமானுக்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. அதை நாம் சடாச்சர மந்திரம் என்று கூறுவோம். இந்த மந்திரம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான மந்திரம் தான். ஆனால் அதன் பொருள் உணராமல் அதை உச்சரிக்காமல் விட்டு விட்டோம் என்பதுதான் குறிப்பிடத்தக்கதாக திகழ்கிறது. முருகப்பெருமானின் சடாசர மந்திரமாக திகழ்வது சரவணபவ. இந்த மந்திரத்தை நம்முடைய சித்தர்கள் வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் போன்ற விஷயங்களுக்காக பயன்படுத்தினார்கள் என்று புராணம் கூறுகிறது.

சரவணபவ என்னும் மந்திரத்திற்கு உரிய முழுமையான அர்த்தத்தை தெரிந்து கொள்வோமா? ச என்றால் செல்வம் என்று அர்த்தம், ர என்றால் கல்வியை தரும் என்று அர்த்தம், வ என்பது முக்தியை தரும் என்று அர்த்தம்,ண என்பது பகையை வெல்லும் என்று அர்த்தம், ப என்பது காலம் கடந்த நிலையை கொடுக்கும் என்று அர்த்தம், வ என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தம். இந்த ஆறும் ஒருவரிடம் இருந்து விட்டால் அவர் வாழ்க்கையில் சிறந்த மனிதனாக திகழ்வார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

- Advertisement -

அப்படிப்பட்ட இந்த சரவணபவ மந்திரத்தை நம்மால் இயன்ற நேரம் எல்லாம் நம்முடைய மனதிற்குள் முருகப்பெருமானை நினைத்துக் கொண்டு உச்சரித்துக் கொண்டே வந்தோம் என்றால் விரைவிலேயே முருகப்பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு முருகப்பெருமானை வசியம் செய்வதற்குரிய சக்தி நமக்கு உண்டாகும் என்று கூறப்படுகிறது. இயன்றவர்கள் காலையில் எழுந்ததும் இந்த மந்திரத்தை 11 முறையும், இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த மந்திரத்தை 11 முறையும் கூறினாலே நல்ல பலன் கிடைக்கும். அந்த மந்திரத்திற்கு உரிய முழுமையான பலனை அனுபவிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:மாந்ரீக தாந்ரீகத்தை போக்கும் எலுமிச்சம்பழம்
சக்தி வாய்ந்த இந்த ஆறு எழுத்து மந்திரத்தை முருகப்பெருமானை நினைத்து முழுமனதோடு கூறுபவர்களுக்கு முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும், வாழ்க்கையில் வெற்றி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்