உங்களுக்கு வாழ்க்கையில் தீராத நோய்நொடி பிரச்சனை இருக்கிறதா, எதிரி தொல்லையால் நிம்மதி இழந்து தவிக்கிறீர்களா, கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா, முயற்சிகளில் காரிய தடை வருகிறதா, கோர்ட் கேஸ் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுபறியாக போராட்டத்தில் செல்கிறதா, இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
உங்கள் பிரச்சனைகளுக்கு 7 வாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கலாம். அற்புதம் வாய்ந்த ஆன்மீகம் சொல்லும் அந்த வழிபாட்டை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. இரண்டு வகையான வழிபாட்டை என்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒன்று முருகர் வழிபாடு, இன்னொன்று விநாயகர் வழிபாடு. இரண்டு வழிபாட்டில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ, அதை செய்து பலன் பெறவும். முதலில் முருகர் வழிபாட்டை பார்த்து விடுவோம்.
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் முருகன் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி முருகப்பெருமானை 6 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
எமகண்ட நேரத்தில் விநாயகர் வழிபாடு
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் விநாயகர் வழிபாடு செய்தால், எவ்வளவு பெரிய காரிய தடையும் விலகும் என்று சொல்லுவார்கள். 3 தேங்காய் வாங்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் தடிமனான கயறில் அந்த மூன்று தேங்காயையும் பூ கட்டுவது போல கட்டிக் கொள்ளவும். மூன்று தேங்காய்க்கு இடது பக்கமும், வலது பக்கமும் நீளமான கயிறு இருக்க வேண்டும்.
இதைக் கொண்டு போய், வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் கொடுத்தால் அதை பிள்ளையாருக்கு மாலையாக போடுவார்கள். நிறைய முறை, ஒரு விஷயத்திற்காக முயற்சி செய்திருப்பீர்கள். அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி அடையாமல் தோல்வியை மட்டுமே உங்களுக்கு கொடுத்திருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நினைத்து செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் இந்த மாலையை கட்டி உங்கள் கையால் பிள்ளையாருக்கு கொடுத்துப் பாருங்கள். உங்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் 7 செவ்வாய்க்கிழமை முடிவதற்குள் நடக்கும் என்பது ஆன்மீகத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொன்ன முருகர் வழிபாடும் ஏழு வாரம் செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: மந்திர கட்டு உடைய பரிகாரம்
இந்த விநாயகர் வழிபாட்டையும் ஏழு வாரம் செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணி வரை எமகண்ட நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. தீராத பிரச்சனைகள் தீர்வதற்கு எமகண்ட நேரத்தில் இறைவனை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.