முருகனின் வேலிற்கும் விந்தணுவிற்கும் உள்ள விஞ்ஞான தொடர்புகள் – வீடியோ

murugan vel vs sperm

இன்றைய நவீன யுகத்தில் மேலை நாட்டினர் அதிநவீன விஞ்ஞானக் கருவிகளை கொண்டு உயிர்களின் பிறப்பு எப்படி நிகழ்கிறது என்று தெரிந்து கொண்டதற்கு முன்பாகவே, நம் நாட்டுச் சித்தர்களும், முனிவர்களும் எவ்வித விஞ்ஞானக் கருவிகளின் உதவியுமின்றி தங்களின் தவ ஆற்றலால் இதை பற்றி அறிந்துவைத்துள்ளனர். அதற்கு சான்றாக விளங்குகிறது நமது மூத்த சித்தனான முருக பெருமானின் கையில் இருக்கும் வேல். முருகனின் வெளிற்கு ஆணின் விந்தணுவிற்கு பல தொடர்புகள் உண்டு. அதை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

உலகின் எல்லா உயிர்களிலும் ஆணினமும்,பெண்ணினமும் இணைந்து தான் வாழ்கின்றன. அப்படி இணைந்து வாழும் பொழுது இந்த இவ்விரு இனங்களும் உடலால் இணைவதால் தான் உலகில் புதிய உயிர்கள் பிறக்கின்றன. அதிலும் பிற எல்லா உயிர்களைக் காட்டிலும் மனிதப் பிறப்பு தனித்தன்மை வாய்ந்ததாகும், காரணம் மனிதன் சிந்திக்கும் திறன் வாய்ந்தவன். ஆதலால் மனிதனும் தன் இனம் எப்படி பிறக்கிறது என்று பல நூற்றாண்டு ஆராய்ந்து வந்துகொண்டிருக்கிறான்.

இன்று தொலைநோக்கியின் வழியாக ஒரு ஆணின் விந்தணு எவ்வாறு பெண்ணின் கருமுட்டையை துளைத்துக் கொண்டு சென்று, அம்முட்டை கருக்கொண்டு, சிறிய மனித சிசுவாக உருவாவதை நாம் காண முடியும். நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் “வேல்” இதைத் தான் உணர்த்துகிறது. மக்கள் தொகை குறைந்திருக்கும் காலத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து உயிர்களை உருவாக்கத் தூண்டுகோலாகவும், போர்க்காலத்தில் வேலைக் கொண்டு எதிரிகளின் உடலைத் துளைத்து உயிரைப்போக்கும் வீரத்திற்குத் தூண்டுகோலாகவும், முருகப்பெருமானின் வேலைத் நமக்குத் தூண்டுகோலாக இருக்கும் வகையில் நம் முன்னோர்கள் அமைத்திருந்தனர்.

மேலும் கருமுட்டையை ஊடுருவும் விந்தணுவினால் நன்மக்கள் தோன்றுவதற்கான சொல்லாக “வெற்றி வேல், வீர வேல்” என்ற சொல்லை நம் முன்னோர்கள் உண்டாகியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே முருகனைத் தொழுவோம் நன்மக்கட்பேறு பெறுவோம்.