- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இதைவிட முருங்கைக்கீரை கூட்டை வேறு யாராலும் சுவையாக செய்ய முடியாது. டேஸ்ல இதை அடிச்சுக்க பக்கத்துல...

இதைவிட முருங்கைக்கீரை கூட்டை வேறு யாராலும் சுவையாக செய்ய முடியாது. டேஸ்ல இதை அடிச்சுக்க பக்கத்துல வேறு எதுவும் நிக்க முடியாது.

- Advertisement -

முருங்கைக் கீரை கூட்டுன்னா, அது இது தாங்க. நீங்க இப்படி முருங்கைக்கீரை கூட்டை ஒருமுறை சமைத்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள். பிறகு நீங்கள்தான் முருங்கைக்கீரை கூட்டில் ஸ்பெஷலிஸ்ட், அப்படி என்ற ஒரு பெயரை வாங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான ஒரு முருங்கைக்கீரை கூட்டா? அப்படி என்ன இதில் ரகசியம் என்று தானே யோசிக்கிறீங்க. வாங்க ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. சுவைத்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும்.

ஒரு பெரிய கட்டு இருக்கக்கூடிய முருங்கைக் கீரையை உருவி சுத்தம் செய்து அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸியில் தேங்காய் துருவல் 1/2 கப், சீரகம் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி தழை – நான்கு இனுக்கு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல இதை அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பூண்டு பல் – 4 இடித்து சேர்த்து, வர மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை கடாயில் போட்டு ஒரு முறை வதக்கிவிட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து விட்டு ஒரு மூடி போட்டு கீரையை வேக வைத்து விடுங்கள்.

- Advertisement -

கீரை முக்கால் பாகம் வெந்து வந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் இருக்கும் கீரையோடு ஊற்றி நன்றாக கலந்து தண்ணீர் சுண்டி மீதமிருக்கும் கீரையும் வெந்து வரும்போது நமக்கு சூப்பரான கீரை கூட்டு மணக்க மணக்க தயாராகி இருக்கும்.

எப்போதுமே முருங்கைக்கீரையை செய்தால் அதில் சிறு கசப்பு இருக்கும். அந்த கசப்பு இருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட மாட்டார்கள். இப்படி ஒரு முறை முருங்கைகீரை கூட்டு செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள். பிறகு உங்களுக்கு கிடைக்கும் பாராட்டை. சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் இந்த கூட்டு அருமையாக இருக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் இந்த கூட்டை வைத்துக்கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான்.

சற்று முன்