ஒரே விசில், ஒரே அரவை. வெறும் 10 நிமிடத்தில் வீடே மணக்கும் அளவிற்கு சூப்பரான மஷ்ரூம் குருமா தயார்.

mushroom-kulambu2
- Advertisement -

ஒரு சட்னி அரைக்கின்ற நேரத்தில் சூப்பரான மஷ்ரூம் குருமா வைக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். அதுவும் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி மஸ்ரூம் குருமா வச்சு பாருங்க. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, நான் ரொட்டி இவைகளுக்கு இந்த சைட் டிஷ் அசத்தலாக இருக்கும். பக்கத்து வீட்டு வரைக்கும் வாசம் வீசக்கூடிய இந்த குருமா ரெசிபியை இப்போது நாமும் தெரிந்து கொள்வோமா.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – 1, கிராம்பு – 1, தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 பல், இந்த பொருட்களை எல்லாம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கி வந்தவுடன் தோல் உரித்த பூண்டு – 5 பல், தோல் சீவிய இஞ்சி – 2 இன்ச், வரமிளகாய் – 5, கருவாப்பிலை – 1 கொத்து, தேங்காய் துருவல் – 1 கைப்பிடி, இந்த பொருட்களை போட்டு மீண்டும் ஒரு நிமிடங்கள் வரை வதக்கி விட்டு இறுதியாக வர மல்லி பொடி – 1 ஸ்பூன், இதில் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த சூட்டிலேயே வரமல்லி பொடி லேசாக வாசம் வரும் அவ்வளவு தான். அடுப்பை அணைத்துவிட்டு இந்த எல்லா மசாலா பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

200 கிராம் அளவு மஸ்ரூமை எடுத்து சுத்தம் செய்து வெட்டி அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குருமாவை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிய துண்டு கல்பாசி – 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி, கருவாப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, புதினா இலைகள் – 10, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கி விட்டு வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை எண்ணெயில் போட்டு, ஒரே ஒருமுறை கலந்து விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலந்து குக்கரை மூடி ஹை ஃப்ளேமில் ஒரே விசில் விட்டால் மணக்க மணக்க குருமா தயார்.

பிரஷர் அடங்கியதும் இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே பரிமாறி பாருங்கள். அவ்வளவு அருமையான ருசி இருக்கும். சாதாரணமாக வைக்கும் குருமாவை விட இந்த குருமாவில் வித்தியாசமான ருசியை உணர முடியும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -