சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இந்தப் பொருட்களை வாங்கினால் வீட்டில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சுபீட்சம் பெருகும் தெரியுமா?

salary-money
- Advertisement -

நம் வாழ்க்கையில் நாம் சுயமாக உழைத்து வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொரு முறையும் முதல் செலவு செய்யும் பொழுது கவனமாக பார்த்து செய்வதும் முக்கியமாகும். முதல் முறை கஷ்டப்பட்டு சம்பாதித்து கையில் வாங்கும் பணம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது நமக்கு வாழ்வின் இறுதி வரை மறந்து போவது இல்லை. சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த பொருட்களுக்கு செலவு செய்தால் வீட்டில் சுபீட்சம் நிலைத்து நிற்கும் என்கிறது சாஸ்திரம். அப்படி சம்பளம் வாங்கியவுடன் வாங்க வேண்டிய முதல் பொருள் என்னவாக இருக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

manjal

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பளம் வாங்கும் பொழுது உங்களுடைய உள்ளங்கையில் வைத்து அதில் இருக்கும் மகாலட்சுமி படத்தை ஒரு முறை பாருங்கள். அந்தப் பணம் நல்ல வழியில் செலவாக வேண்டும், வீண் விரயங்கள் ஏற்பட கூடாது என்று மனமார மகாலட்சுமி தாயாரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நேரே கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன் மஞ்சள் துணியை விரித்து அதன் மீது வையுங்கள்.

- Advertisement -

பின்னர் அதிலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து முதல் வேலையாக நீங்கள் முதல் பொருளாக வாங்க வேண்டியது மஞ்சள் ஆகும். மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் சம்பள பணத்தில் இருந்து முதல் பணம் ‘மஞ்சளுக்கு’ செலவு செய்வதாக இருக்க வேண்டும். மஞ்சள் மங்களகரமான பொருட்களில் ஒன்று, மேலும் குடும்பத்தில் சுபீட்சத்தை கொடுக்கக் கூடியதும் ஆகும். மஞ்சள் தூளை வாங்கி வந்து எவர் சில்வர் டப்பாவில் போட்டு நான்கைந்து மிளகுகளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் வண்டுகள் வராமல் இருக்கும். சமையலுக்கு இல்லை என்றாலும், சாமிக்கு வாங்கும் மஞ்சளாக கூட வாங்கலாம். ஏதாவது ஒரு முறையில் மஞ்சள் வாங்குவது நல்லது.

salt

நீங்கள் சம்பளம் வாங்கிய கிழமை வெள்ளிக் கிழமையாக இருந்தால் வெள்ளிக் கிழமையில் வாங்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் கல் உப்பும் ஒன்று. கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்குவது, அதுவும் முதல் சம்பளத்தில் இருந்து வாங்குவது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். அதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உணவில் உப்பை குறைவாக சேர்ப்பது தான் ஆரோக்கியம்.

- Advertisement -

அன்னதானம் போன்ற இடங்களுக்கு உங்கள் முதல் சம்பளத்திலிருந்து முதல் தொகையை முடிந்த அளவிற்கு தானமாக கொடுக்கலாம் அல்லது ஏதாவது ஒரு சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி தானம் செய்யலாம். முதல் தொகையை பசியால் வாடும் ஒருவருக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தால் கூட புண்ணியம் தான்.

sugar

கல் உப்பில் மகாலட்சுமி இருப்பதால் உப்பு வாங்குகிறோம்! அதே போல இனிப்பு என்னும் சொல்லிற்கு அர்த்தமாக இருக்கும் சர்க்கரையும் முதல் சம்பள பணத்தில் இருந்து வாங்கலாம். சர்க்கரை என்பது சமையலறையில் வெகு விரைவாக தீர்ந்துவிடும் ஒரு பொருளாக இருக்கின்றது எனவே சர்க்கரையை ஒவ்வொரு சம்பள பணத்தை வாங்கிய பின்பும் முதல் செலவாக வாங்கினால் கூடுதல் அதிர்ஷ்டம் உண்டாகும். கல் உப்பு, சர்க்கரை, மஞ்சள், அன்னதானம் ஆகிய இந்த நான்கு விஷயங்களில் எது உங்களால் முடியுமோ! அதனை முதல் செலவாக ஒவ்வொரு மாதமும் சம்பளப் பணத்திலிருந்து செய்து வந்தால் வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிரம்பி சுபீட்சம் பெருகும்.

- Advertisement -