சுவையான முட்டை கட்லட் செய்வது எப்படி?

cutlet

முட்டை கட்லெட் என்பது மாலை வேளைகளில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக் வகை. நிறைய காய்கறி கலந்த கட்லெட்டை நாம் சுவைத்து இருப்போம். ஆனால், இப்போது நாம் பாக்க இருப்பது சிம்பிள் கட்லெட். இதை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

cutlet_1

முட்டை கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை – 4
கறிமசாலா தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1
பிரட் – 4 துண்டு
கார்ன் பிளார் மாவு – 1/2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்

முட்டை கட்லெட் செய்முறை:

முதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு பவுலில் போட்டு கையால் பிசைந்து கொள்ளவும். அதனுடன் கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிறகு இதனை நீளவாட்டில் உருண்டையாக சின்ன சின்ன துண்டுகளாக பிடித்து வைத்து கொள்ளவும்.

cutlet_2

- Advertisement -

பிறகு பிரட் துண்டுகளை மிக்சியில் போடு தூளாக அரைத்து அதனுடன் கார்ன் மாவு சேர்த்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். மற்றொரு தட்டில் கடலை மாவினை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஏற்கனவே பிடித்து வைத்துள்ள துண்டுகளை கடலை மாவு தட்டில் உருட்டி எடுத்து பிறகு அதனை பிரட் தூளில் உருட்டி வைத்து கொள்ளவும். அனைத்து தூண்டுகளையும் இவ்வாறாக தயார் செய்து வைத்து கொள்ளவும்.

cutlet_3

பிறகு ஒரு கடாயில் தயார் செய்த கட்லெட் துண்டுகள் மூழ்காத அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றி அந்த கட்லெட் துண்டுகளை போடவும். இருபுறமும் வேகுமாறு திருப்பி திருப்பு விட்டு 1 நிமிடம் வரை எண்ணையில் போட்டு எடுத்தால் சுவையான முட்டை கட்லெட் தயார் .

cutlet_4

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
சுவையான இறால் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Muttai cutlet recipe in Tamil. It is also called as Muttai cutlet seimurai or Muttai cutlet seivathu eppadi in Tamil or Muttai cutlet preparation in Tamil.