வெங்காயம் தக்காளி எதையுமே சேர்க்காம முட்டை மசாலாவை ஒரு முறை வித்தியாசமா இப்படி செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

muttai masala fry rice
- Advertisement -

அசைவ வகையில் பல உணவுகள் இருந்தாலும் கூட நாம் முதலில் தேர்ந்தெடுப்பதென்னவோ இந்த முட்டையை தான். அதே போல் சாதத்திற்கு ஏதாவது ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது முட்டை தான். ஏனெனில் இதை செய்வது மிகவும் சுலபம். அப்படி நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு சைட் டிஷ்யை இன்னும் அதிக சுவையுடன் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த முட்டை மசாலா செய்வதற்கு ஆறு முட்டை எடுத்து வேக வைத்து அதன் தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த முட்டையை இரண்டாக கத்தி வைத்து நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மசாலா முட்டையின் உள்ளே நன்றாக ஊறி சாப்பிடும் போது சுவையும் அருமையாக இருக்கும்.

- Advertisement -

இந்த முட்டைக்கு ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும் அதற்கு 1 ஸ்பூன் தனியாத் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், 1/4 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் இது மசாலாவிற்கு நல்ல ஒரு நிறத்தை கொடுக்கும். இவை எல்லாம் சேர்த்து ஒரு முறை நன்றாக தண்ணீர் ஊற்றாமல் கலந்து விடுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி இந்த மசாலாவை பேஸ்ட் பதத்திற்கு குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் முட்டையின் மஞ்சுள் கருவில் மசாலாவை நன்றாக தேய்த்து வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் வரை இது அப்படியே இருக்கட்டும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடான பிறகு 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த மசாலாவுக்கு கொஞ்சம் எண்ணெய் கூடுதலாக இருந்தால் முட்டையில் மசாலா சேர்ந்து நல்ல கிரிஸ்பியாக மாற உதவியாக இருக்கும். எண்ணெய் சூடான பிறகு ஒரு கைப்பிடி நிறைய கறிவேப்பிலை எடுத்து பொடியாக நறுக்கி போட்டு விடுங்கள். அதன் பிறகு மசாலா தடவிய முட்டையை இதில் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து முட்டையின் மஞ்சள் கரு கடாயின் அடிப்பகுதியில் படும்படி திருப்பி போட்டு விடுங்கள். அப்போது தான் மாசாலா இதனுள் நன்றாக இறங்கும்.

- Advertisement -

ஒரு புறம் மசாலா சேர்ந்து நன்றாக சிவந்த பிறகு மறுப்புறம் திருப்பிப் போட்டு சிறிது நேரம் மசாலாவின் பச்சை வடை போகும் வரை வைத்திருந்து மேலே கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள். சுவையான முட்டை மசாலா சூப்பராக தயார்.

இதையும் படிக்காலமே: தள்ளுவண்டி கடை ஸ்பெஷல் புதினா சட்னியின் ரகசியம் இதுதான். இந்த ரகசிய டிப்ஸ ஃபாலோ பண்ணி சட்னி அரைச்சீங்கன்னா, புதினா கார சட்னி செம்மையா வரும்.

இந்த முட்டை மசாலாவை சாம்பார் சாதம், ரசம் சாதம் வெரைட்டி என எந்த வகையான சாதத்துடனும், பிரியாணி வகையுடனும் கூட வைத்து சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -