- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎந்த கிழமையில் எந்த நிற ஆடைகள் அணியக்கூடாது

எந்த கிழமையில் எந்த நிற ஆடைகள் அணியக்கூடாது

- Advertisement -

ஒவ்வொரு நாளும் ராசி பலனை பார்த்து அதில் என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை கேட்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒரு சிலர் அன்றைய தினம் அவர்களுக்கு உகந்த நிறம் எது என்பதை கேட்டு அந்த ஆடை அணிந்து கொண்டு செல்வார்கள். அந்த நிறத்திற்கு அவ்வளவு பலன்கள் இருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோல் ஒரு சிலர் எந்தெந்த கிழமையில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்திற்கு உகந்த நிறத்தில் ஆடை அணிவார்கள். குறிப்பாக வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடை அணிவது என்பது பலரும் மேற்கொள்ளும் ஒரு செயல் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்கும். அப்படி கிடைப்பதனால் நாம் செய்யும் காரியம் வெற்றி அடையும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அந்த வரிசையில் எந்த கிழமை எந்த ஆடையை அணியக்கூடாது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

எந்த கிழமையில் எந்த நிற ஆடைகள் அணியக்கூடாது

பொதுவாக ஆன்மீகத்தின்படி வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் ஆடை அணிவது நல்லது என்று கூறுவார்கள். அதேபோல் ஜோதிடத்தின்படி எந்த நாட்களில் எந்த நிற ஆடையை அணியக்கூடாது என்றும் கூறுகிறார்கள். அதனைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதாவது ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு கிரகத்தை பிரதிபலிக்கிறது. அந்நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நிறத்தில் நாம் ஆடை அணிவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். அதுவே அந்த நாட்களில் கிரகத்திற்கு எதிர்மறையாக கருதப்படும் நிறங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் தீய விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த கிழமையாக திகழ்கிறது அன்றைய தினத்தில் கருப்பு நிறத்தில் ஆடை அணியக்கூடாது. திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்கு உரிய கிழமையாக திகழ்கிறது அன்றைய தினத்தில் சிவப்பு நிற ஆடை அணியக்கூடாது.

செவ்வாய்க் கிழமை அங்காரகன் என்று கூறக்கூடிய செவ்வாய் பகவானுக்குரிய தினமாக கருதப்படுகிறது அன்றைய தினத்தில் பச்சை நிற ஆடை அணியக்கூடாது. புதன்கிழமை புதன் பகவானின் குரிய கிழமையாக திகழ்கிறது அன்றைய தினத்தில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிய கூடாது.

- Advertisement -

வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது அன்றைய தினத்தில் கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது. வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்த்தப்படுகிறது அன்றைய தினத்தில் ஆரஞ்சு நிற ஆடைகளை அணியக்கூடாது.

சனிக்கிழமை என்பது சனிபகவானுக்குரிய கிழமையாக திகழப்படுகிறது அன்றைய தினத்தில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு ஏற்ற வேண்டிய சிறப்பு விளக்கு

மிகவும் எளிமையான இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும் பொழுது நமக்கு நவகிரகங்களின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதனால் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்