கடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம்.

kuberan

தீராத கடனில் உள்ளவர்கள் உங்கள் கடன்களை விரைவாக திருப்பித்தர இந்த மைத்ர முகூர்த்த நேரத்தை கடைபிடியுங்கள்.
கலியுகம் என்றாலே துன்பமான யுகம் தான் என்று அர்த்தம். இந்த யுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சனை இருந்துதான் வருகின்றது. அதனை ஒன்றும் நாம் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த கடனை விரைவாக எப்படி திருப்பிக் கொடுக்க முடியும் என்பதற்கு ஒரு தீர்வு நம் ஜோதிடத்தில் உள்ளது. அதுதான் இந்த மைத்ர முகூர்த்தம்.

‘சிலரின் கை மண்ணை எடுத்தால் கூட பொன்னாக மாறிவிடும்’ என்று கூறுவார்கள். அப்படி விரைவாக முன்னேறுபவர்களை அதிர்ஷ்டம் உடையவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அந்த அதிர்ஷ்டம் நம் அனைவருக்குமே இருக்கின்றது என்பது நமக்கு தெரியாது. நாம் தொடங்கும் காரியமானது எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்படுகிறது என்பதை வைத்து தான், அந்தச் செயலில் வெற்றி அமைகின்றது. இது சிலருக்கு புரிவதில்லை. இப்படி நாம் வாங்கும் கடனை எப்படி சுலபமாக திருப்பி தரலாம் என்ற சூட்சுமத்தை தெரியாதவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கான தீர்வு தான் இந்த மைத்ரேய முகூர்த்தம்.

இந்த மைத்ரேய நேரத்தில் மைய பாகத்தை நாம் உபயோகப்படுத்திக் கொண்டால் மிகவும் நன்மை தரும். விரைவில் கடல் இல்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும். வங்கிக் கடனை திருப்பித் தரவும் இந்த முகூர்த்தம் பயன்படும்.

ways to increase money in home

இந்த மைத்ர முகூர்த்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பித் தந்தால் போதும். அவ்வளவுதான் சிறுக சிறுக உங்கள் கடன் ஆனது அடைபட்டு விடும்.

- Advertisement -

மைத்ரேய முகூர்த்தம் நவம்பர் 2019

9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை.
மாலை 4.36 முதல் 6.36 வரை

காலை மற்றும் இரவு 10.36 முதல் 12.36 வரை

11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை

27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை

மைத்ரேய முகூர்த்தம் டிசம்பர் 2019

8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை

24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை

மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2020

4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை

மைத்ரேய முகூர்த்தம் பிப்ரவரி 2020

1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.82 வரை

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை

மைத்ரேய முகூர்த்தம் மார்ச் 2020

8.3.2020 சனி காலை மற்றும் இரவு 8.53 முதல் 10.53 வரை.
மதியம் மற்றும் நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை

14.3.2020 வெள்ளிக்கிழமை இரவு 10.04 முதல் 12.04 வரை

21.3.2010 சனி காலை மற்றும் இரவு 8.39 முதல் 10.39 வரை. மதியம் மற்றும் நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை.

26.3.2020 வியாழன்  காலை 6.52 முதல் 8.52 வரை

27.3.2020 காலை 6.56 முதல் 8.56 வரை

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை

செவ்வாய்க் கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க் கிழமையும் அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சக லக்னம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தம் ஆகின்றது.

Astrology

மேலே குறிப்பிட்டுள்ள காலங்களில் லக்னமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் பலன்களை பெறலாம்

ஆனால் செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100% பலன்களை பெறுவது உறுதி.

இதையும் படிக்கலாமே
இந்த மலரை பூஜைக்கு இனி பயன்படுத்த வேண்டாம்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mythra muhurtham. Maitreya muhurtham tamil. Maitreya muhurtham today.