இந்த கடவுளுக்கு விளக்கு ஏற்றி பால் வைத்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா? குடும்பத்தில் இருக்கும் எல்லா தோஷங்களும் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

vilakku-nagar-silai
- Advertisement -

ஒரு குடும்பத்தில் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்றால் அவர்களுக்கு தோஷம் இருக்கிறது என்பது பொருளாகும். அவர்களைப் பற்றிய சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இதனை பற்றிய தெளிவும் உண்டாகும். அந்த வகையில் குடும்பத்தில் யாருக்காவது நாக தோஷம் இருந்தால் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் செய்தால் கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம்! அது எப்படி செய்ய வேண்டும்? என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

nagasilai

பொதுவாக நாக தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் ஆகிய தோஷங்கள் இடம் பெற்று இருக்கும் ஜாதகர்கள் தோஷ நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்வது உத்தமம். அவர்கள் காலை, மாலை என இருவேளையும் கீழ்வரும் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து வந்தால் தோஷத்தில் இருந்து விடுபட்டு விடுவார்கள்.

- Advertisement -

நாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் ரூபப் பிரபவம் நமஹ!
ஓம் சாரும் கேவும் நமஹ!
ஓம் சரவும் பரவும் நமஹ!
ஓம் நய்யும் மெய்யும் நமஹ!
ஓம் ஜெகமும் புரமும் நமஹ!
ஓம் காளத்தி மேளத்தி நமஹ!
ஓம் ஜாலும் மேலும் நமஹ!
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ!
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ!
ஓம் சரசாலி பிரசாலி நமஹ!
ஓம் ஓம் ஓம்!!

snake-putru

புற்று இருக்கும் கோவிலுக்கு சென்று அங்குள்ள புற்றுக்கு மஞ்சள் தடவி, குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். நாகருக்கு பொங்கல் படைத்து வழிபடுவது எண்ணிய வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது. நாகரை யாரெல்லாம் வழிபடலாம் தெரியுமா? குழந்தை இல்லாத தம்பதியர்கள் குழந்தை பாக்கியம் பெற இந்த வழிபாடு செய்வார்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று இணையவும் இவ்வழிபாடு சிறந்த தேர்வாக அமையும். சிசு சுமக்கும் தாய்மார்கள் தங்களுக்கு நடக்க இருக்கும் பிரசவம் சுகமாக அமைய பிரார்த்தனை செய்து கொள்வார்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரவும் நாகரை வழிபடுவார்கள்.

- Advertisement -

ராகு தசை, கேது தசை நடப்பவர்கள், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இந்த வழிபாடு செய்து கொள்வது மிகவும் நல்லது. அடிக்கடி உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் நாகரை வழிபடுங்கள் நல்ல ஒரு பலன் கிடைக்கும். புற்றுக்குப் பால், முட்டை வைப்பதும் தோஷ பரிகாரம் என்று பக்தர்களால் கடைபிடித்து வரப்படுகிறது. சில கோவில்களில் புற்று மண்ணைப் பிரசாதமாக அளிப்பதும் உண்டு.

புற்றின் மீது எலுமிச்சை பழம் வைத்து புற்றுக்கு பால் ஊற்றி நிவேதனமாக பால் மற்றும் வாழைப்பழம் வைத்து வழிபட வேண்டும். புற்று அமைந்திருக்கும் இடத்தில் சாணத்தால் மெழுகி கோலமிடுபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வழிபாட்டை தினமும் மாலை வேளையில் செய்து வந்தால் கூடிய விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் நாகர் வழிபாடு செய்வது உத்தமம். கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர இரண்டு நகங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் நாகர் சிலைக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்யலாம். நாகர்களை வழிபடுவது கண்ணுக்கு தெரியாத நாக தோஷங்கள் மற்ற தோஷங்கள் அனைத்தும் நீங்குவதற்கு தான்.

பால், பொங்கல், வாழைப்பழம் முதலான பொருட்களை நிவேதனமாக வைத்து நாகருக்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து பின்னர் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, சந்தன குங்கும திலகம் இட்டு, சூடம் ஏற்றி மனதார வழிபட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அல்லது உங்கள் பிரச்சினை தீரும் வரை செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா தோஷங்களும் நீங்கும்.

- Advertisement -