இறைவனுக்காக படைக்கப்படும் நெய்வேதியம் எப்படி இருக்க வேண்டும்! எப்படி இருந்தால் இறைவன் அதை உடனே ஏற்றுக் கொள்வார்?

nivedanam
- Advertisement -

நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்காக செய்யப்படும் நெய்வேதியமானது எப்படி இருக்க வேண்டும்? அதை இறைவனுக்கு எப்படி படைக்க வேண்டும்? சூடாக படைக்க வேண்டுமா? சமைத்த பாத்திரத்தோடு கொண்டுவந்து படைக்க வேண்டுமா? வெள்ளித் தட்டில் படைப்பதா? வாழையிலையில் படைப்பதா? அதிகப்படியான நெய் ஊற்றி, சமைக்க வேண்டுமா? நல்ல சுவையோடு சமைக்க வேண்டுமா? எப்படித் தான் இறைவனுக்கு நெய்வேதிதை சமைப்பது? இப்படிப்பட்ட கேள்விகள் உங்கள் மனதில் இருக்கிறதா?

nivedanam1

இதோடு சேர்த்து, பலபேர் மனதில் இருக்கக் கூடிய ஒரு கேள்வி, இறைவனுக்குப் படைக்கப்படும் அந்த நெய்வேத்தித்தை இறைவன் சாப்பிடுவாறா? அப்படி அவர் சாப்பிட்டால், இத்தனை வகையான பலகாரங்களை நாம் இறைவனுக்கு படைப்போமா? என்ற கேள்வியினை இனி உங்களிடம் யாராவது கேட்டால், அதற்கான சரியான பதிலை நீங்கள், அவர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அல்லது இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவின் மூலம் அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இறைவனுக்காக நாம் செய்யக்கூடிய பிரசாதம் என்பது சுவையாக இருக்கின்றதா, நிறைய நெய், முந்திரி பருப்பு போட்டு இருக்கின்றதா அல்லது அந்த பிரசாதம், வெள்ளித்தட்டில் படைக்கின்றோமா அல்லது தங்கத்தட்டில் படைக்கின்றோமா என்றெல்லாம் இறைவன் கட்டாயம் பார்க்க மாட்டார். சுத்தமான மனதோடு, உடல் சுத்தத்தோடு, உண்மையான பக்தியோடு, வெறும் சாதத்தை வைத்தால் கூட, அந்த இறைவன் மனதார ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். இது நம் எல்லோருக்கும் தெரிந்தாலும், ஏனோ நம்முடைய உள்மனது, இறைவனுக்கு ‘அப்படி சமைக்க வேண்டும், இப்படி சமைக்க வேண்டும், என்று அலைபாயுதே தவிர’ உண்மையான பக்தியோடு சமைக்க வேண்டும் என்பதை நினைக்க மாறுகின்றது.

kanji periyavar

ஒருமுறை காஞ்சி பெரியவரை பார்ப்பதற்கு, ஒரு புத்திசாலி மனிதர் வந்திருந்தார். அவருக்கும் இதே சந்தேகம் இருந்தது. இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதத்தை இறைவன் தான் சாப்பிடுவது இல்லையே! எதற்கு பாசாங்கு காட்டுவதற்காக, இப்படி பிரசாதங்களை இறைவன் முன்பாக படைக்கிறார்கள், என்ற இதே கேள்வியை காஞ்சி மகா பெரியவரை பார்த்து கேட்டாராம், அந்த புத்திசாலி மனிதர்.

- Advertisement -

பக்குவம் மிக்க பெரியவர்களிடம் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் சரியாகத்தான் வரும் அல்லவா? மகாபெரியவர் அந்த கேள்விக்கான பதிலை அவரிடம், அப்போது சொல்லவில்லை. பெரியவரின் அருகில் ஒரு கந்த சஷ்டி கவசம் புத்தகம் இருந்தது. அந்த சஷ்டி கவசப் புத்தகத்தை எடுத்து, புத்திசாலியாக கேள்வி கேட்ட அந்த நபரின் கையில் கொடுத்து, ‘அடுத்த முறை இங்கே வரும்போது இந்தப் புத்தகத்தில் இருக்கும் கவசத்தை மனப்பாடம் செய்து வா!’ என்று சொன்னார்.

3-god-picture

அந்தப் புத்திசாலிக்கோ ஒரே குழப்பம். நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாத மகா பெரியவா, எதற்காக நம்மை இந்தப் புத்தகத்திலுள்ள கவசத்தை மனப்பாடம் செய்யச் சொல்கிறார்? என்று யோசித்து பெரியவரிடம் ‘நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே’ என்றவாறு கேள்வியை எழுப்பினார்.

- Advertisement -

பெரியவர், ‘முதலில் நான் சொன்னதை நீ செய்துவிட்டு வா! அதன் பின்பு பதிலை கூறுகின்றேன்’ என்று அந்த புத்திசாலியை அனுப்பி வைத்துவிட்டார். இரண்டு மூன்று, நாட்கள் கழித்து, அந்த புத்திசாலி மனிதர் கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படித்து மனப்பாடம் செய்துவிட்டு பெரியவரை சந்திக்க மீண்டும் ஆசிரமத்திற்கு வருகை தந்தார்.

praying god

ஆசிரமத்திற்கு வருகை தந்த அந்த புத்திசாலி மனிதர், பெரியவரைப் பார்த்து ‘தான் இந்த புத்தகத்தில் உள்ள கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்துவிட்டேன் என்று சொல்லி, ஒப்புவிக்க தொடங்கியுள்ளார்’.

இப்போது மஹா பெரியவா அந்த புத்திசாலியடைய கேள்விக்கு பதில் கூறியதாவது:
அதாவது, இந்தப் புத்தகத்தில் இருக்கும் கந்தசஷ்டி கவசத்தின் வரிகள் உன்னுடைய மனதில் பதிந்து விட்டது. இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் உனக்குள்ளே வந்துவிட்டது. அப்போது இந்தப் புத்தகத்தில், அந்த வரிகள் இருக்க கூடாது அல்லவா? அந்தப் புத்தகத்தை புத்திசாலி மனிதரிடம் காட்டி, அந்த வரிகள் அப்படியேதான் இருக்கின்றது! அது எப்படி? என்ற கேள்வியைக் கேட்டார் பெரியவா. அதிர்ச்சியில் ஆழ்ந்து போனானர் புத்திசாலி மனிதன்.

nivedanam2

அதாவது, புத்தகத்தில் உள்ள வரிகளை, எப்படி நீ மானசீகமாக உனக்குள் உள்வாங்கி கொண்டாயோ, அதே போல் தான், நாம் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதத்தில் உள்ள வாதத்தினை, மானசீகமாக இறைவன் தனக்குள் உள்வாங்கி கொள்வார். ஆனால், அந்த பிரசாதம் அங்கேயேதான் இருக்கும். என்றவாறு விளக்கத்தினை புரிய வைத்தார்.

praying god 4

நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் சொல்லுவார்கள், சாமிக்கு சமைக்கும்போது முகர்ந்து பார்க்கக் கூடாது, சாமிக்கு சமைக்கப்படும் சாப்பாட்டில் எப்போதுமே உப்பை குறைவாக சேர்க்க வேண்டும். அப்போது அதனுடைய வாசமும் குறைவாகத்தான் இருக்கும். நம் வாசம் பிடிக்காமல் அந்த சாப்பாட்டை இறைவனுக்காக படைக்கவேண்டும் என்று சொல்லுவதற்கும் கூட, இது தான் அர்த்தமாக இருக்குமோ? சரி, இனிமே யாராவது இறைவனுக்கு படைக்கப்படும் சாப்பாட்டை இறைவன் சாப்பிடப் போகிறாரா, என்றவாறு கேள்வியை கேட்டால் நீங்களும் மகாபெரியவா சொன்ன இதே பதிலை சொல்லி அவர்களுக்கு புரிய வையுங்கள்.

இதையும் படிக்கலாமே

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -