வீட்டில் இறைவனுக்கு உணவை படைக்கும்போது கூறவேண்டிய மந்திரம்

padayal-1

மக்களில் பெரும்பான்மையானவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த சாதாரண நிலையில் வாழும் மக்களும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய வேண்டும் என்று தான் வேதங்களை அடிப்படையாக கொண்ட “சனாதன தர்மமாகிய” “இந்து மதம்” ரிஷிகளால் உண்டாக்கப்பட்டது. இந்த இந்து மத வேதங்களில் எந்த ஒரு பொருளையும் முதலில் இறைவனுக்கு நிவேதிப்பதால், அது இறைவனின் மிகுந்த நல்லாசிகளை நமக்கு பெற்று தரும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி நாம் இறைவனுக்கு உணவை நிவேதித்து கூற வேண்டிய மந்திரம் இது.

padayal

நெய்வேத்தியம் மந்திரம்

பிரம்மார்ப்பணம் பிரம்மஹவிர் பிரம்மாக்னோ பிரம்மனாகுதம்
பிரம்மைவதேன கந்தவ்யம் பிரம்ம கர்ம சமாதினா

அற்புதமான இந்த மந்திரத்தை தினமும் காலையும், மாலையும் வீட்டில் இறைவனை பூஜிக்கும் போது, அந்த இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொருள் உணவாக இருப்பின், அந்த உணவை இறைவனுக்கு நிவேதித்த பின்பு இம்மந்திரத்தை 9 முறை கூறி அந்த இறைவனையும் மற்றும் பிரபஞ்ச சக்தியையும் வணங்க வேண்டும். இப்படி செய்வதால், இறைவனின் நல்லாசிகளும் இப்பிரபஞ்சத்தின் சிறந்த சக்திகளும் அந்த உணவில் நிரம்பும். பிறகு பூஜை முடிந்து அவ்வுணவை உட்கொள்வது ஒருவரின் உடல் மனதிற்கு நலத்தை கொடுக்கும்.

நிவேதனம் செய்வதன் தத்துவம்:
ஒரு சில மனிதர்கள் தாங்கள் தான் இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கே அதிபதி என்றும், தங்களின் கடின உழைப்பினால் தான் இந்த பூமியில் பல ஆச்சர்யங்கள் நிகழ்வதாக கருதுகின்றனர். ஒரு சிலர் இயற்கையையே அல்லது இறைவனையோ தங்களுக்கு தேவையான ஒரு காரியம் நடக்க வேண்டும் எனும் போது வணங்குகின்றனர். அந்த காரியம் நிறைவேறிய உடன் தங்கள் முன்பு வேண்டிய இறைவனை அல்லது இயற்கையை நினைத்து கூட பார்க்காமல் நன்றி மறக்கின்றனர்.

Sivanmalai Murugan

ஆனால் இறைவனோ அல்லது இயற்கையோ நாம் எவ்வாறு நடந்து கொண்டாலும் நம் மீது எப்போதும் அன்பு மற்றும் கருணையை மட்டுமே பொழிகின்றன. இதை தங்களின் நெடுங்கால தவத்தின் ஆற்றலால் உணர்ந்தனர் நம் முன்னோர்களான ரிஷிகள். எனவே தான் தாங்கள் செய்கிற எந்த ஒரு காரியத்திலும், அதில் பயன்படும் பொருட்களை இறைவனுக்கு நிவேதனமாக படைத்து, அதில் அந்த இறைவனின் அருளும் இந்த பிரபஞ்சத்தின் சக்தியும் நிறைந்த பின்பு அவர்கள் அப்பொருட்களை பயன்படுத்தினர். எனவே நாமும் எந்த ஒன்றையும் அந்த இறைவனுக்கு முதலில் படைத்து பின்பு உபயோகப்படுத்துவதால் அந்த இறைவனின் பூரண ஆசி கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
கண்திரிஷ்டியை முற்றிலுமாக நீக்கும் மந்திரம்

English Overview:
Here we have Naivedyam mantra in Tamil. This mantra needs to be chanted 9 times while doing Naivedyam to God.