- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்களுடைய நாக்கில் மச்சம் இருக்கிறதா? மிகவும் கவனம் தேவை. நீங்களே உங்களுக்கான பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்

உங்களுடைய நாக்கில் மச்சம் இருக்கிறதா? மிகவும் கவனம் தேவை. நீங்களே உங்களுக்கான பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்

- Advertisement -

நாக்கில் மச்சம் இருப்பவர்களை பார்த்து பலரும் கருநாக்கு என்று அழைப்பார்கள். எது சொன்னாலும் பளித்து விடும். இவர்கள் கோபப்பட்டு ஏதாவது சொன்னால் அப்படியே நடந்துவிடும், கோல் சொல்பவர்கள், பொய் சொல்பவர்கள் என்று பலவிதமான கருத்துக்கள் இவர்களைப்பற்றி நிலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று வரையிலும் இதை உண்மை என்று தான் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு நாக்கில் மச்சம் உள்ளவர்களின் உண்மை பலன் பற்றியும் அதனால் உண்டாகும் பிரச்சனை பற்றியும் அதற்கான பரிகாரம் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tounge

என்னதான் காலம் அதிக அளவு முன்னேறி விட்டாலும் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்கள் இன்னும் நம் மனதில் பதிந்து தான் இருக்கின்றன. அவ்வாறு ஒருவரை நாம் முதலில் பார்க்கும் பொழுது அவர்களுடைய தோற்றத்தை தான் முதலில் கவனிப்போம். அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் நாக்கில் மச்சம் இருப்பதை கவனித்து விட்டால் நாம் சற்று கவனத்துடன் செயல் படுவோம்.

- Advertisement -

நம்மையும் அறியாமல் நம் மனதிற்குள் இவர்களைப் பற்றிய தவறான எண்ணம் வர ஆரம்பித்துவிடும். அந்த எண்ணம் இப்போதும் பலரின் மனதிலும் இருக்கிறது. ஒரு சிலர் இவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வாயிலிருந்து வரும் எந்த வார்த்தையும் அப்படியே பளித்து விடும். எனவே மற்றவர்கள் இவர்களிடம் என்னை புகழ்ந்து கூறுமாறும் விருப்பப்பட்டு கேட்பார்கள்.

ஒரு சில சமயங்களில் பிரச்சனை தோன்றி விட்டால் அங்கு இந்த நபர்களையே அனைவரும் குறை கூறுவார்கள். இவர்கள் தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்திருப்பார்கள். நாக்கில் மச்சம் உள்ளவர்களுக்கு இவ்வாறு பிரச்சனை செய்வதே வழக்கமாக இருக்கும் என்று அவர்களை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் குறை கூறிக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் உண்மையில் நாக்கில் மச்சம் உள்ளவர்களை அதிர்ஷ்டசாலி என்றும் சொல்லலாம், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றும் சொல்லலாம். ஏனென்றால் இவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை மற்றவர்களை வசியம் செய்வதாக இருக்கிறது. இவர்கள் அன்பாக சொன்னாலும் அனைவரும் கேட்பார்கள், கோபமாக சொன்னாலும் அனைவரும் பயத்தில் அமைதியாகி விடுவார்கள், பயமுறுத்தி சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள். இவ்வாறு இவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைவரை கட்டுப்படுத்தும் சக்தியை கொண்டிருக்கும்.

prachanai

ஆனால் இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இவர்களால் ரகசியத்தை பாதுகாக்க முடியாத. இவர்களைப் பற்றிய உண்மையை இவர்களே மற்றவர்களிடம் உளறி விடுவார்கள். அதனால் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் இவர்களால் அது முடியாது. இவ்வாறு தேவை இல்லாத இடத்திலும் சொல்லக் கூடாததை சொல்லி பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள்.

happy

இவர்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும். முதலில் அதற்காக கொஞ்சம் துளசி இலைகளை எடுத்துக் கொண்டு, நாட்டு மருந்து கடைகளில் அதிமதுரம் வாங்கிக்கொள்ள வேண்டும். அதிமதுரத்தை சிறிய உரலில் வைத்து நன்றாக இடித்துக் கொண்டு அதனுடன் துளசி இலையையும் சேர்த்து ஜூவிங்கம் மெல்லுவது போல வாயில் வைத்து மென்று அதன் சாறை மட்டும் விழுங்க வேண்டும். இதனை அடிக்கடி செய்து வந்தால் இவ்வாறு தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்வதை தவிர்க்க முடியும்.

சற்று முன்