- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநல்ல வேலை கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

நல்ல வேலை கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

நல்ல விஷயங்களாக இருந்தால் எதற்காக விநாயகர் சதுர்த்தி வரை காத்திருக்க வேண்டும். இன்றிலிருந்து இந்த மந்திரத்தை சொல்லலாமே என்று சில பேர் சிந்திக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கும் முன்பு, ஒரு பிள்ளையாரை நாம் வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். அந்த வழிபாட்டை, விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்குவது நல்லது தானே.

அதற்காகத்தான் இந்த பதிவு. நல்ல படிப்பு இருக்கிறது, நல்ல திறமை இருக்கிறது, ஆனால் நல்ல வேலை கிடைக்கவில்லை. கை நிறைய சம்பாத்தியம் இல்லை, இந்த பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது இதோ ஒரு எளிமையான மந்திரம், எளிமையான வழிபாடு உங்களுக்காக மட்டும் தான்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு சின்னதாக ஒரு வெள்ளருக்கன் விநாயகரை வாங்கி வைப்பது சிறப்பு. இதை பூஜை அறையில் தான் கட்டாயம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. உங்களுடைய வீட்டில் ஐந்து அடி உயரத்தில் ஏதாவது டேபிள் இருந்தால் அதன் மேலே வைக்கலாம்.

இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு குளிர்சாதன பெட்டியின் மேலே கூட இந்த சின்ன வெள்ளருக்கன் பிள்ளையாரை வைத்து விடுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ,இந்த பிள்ளையாருக்கு முன்பாக நின்று நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 9 முறை சொல்லுங்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

வேலை கிடைக்க பிள்ளையார் மந்திரம்

ஓம் ஸ்ரீ சிவ சூரிய நாராயண சுவாமினே நமஹ !

வெள்ளருக்கு என்பது சூரியனை குறிக்கக் கூடியது. அதில் பிள்ளையாரை செய்து வைத்து வழிபாடு செய்து இந்த மந்திரத்தை சொல்லும்போது உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் விலகிவிடும். எவ்வளவு தடை உங்களுக்கு வந்தாலும் உங்கள் கையை வந்து சேர வேண்டிய வேலையை, கட்டாயம் இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து உங்களிடம் சேர்த்து விடும். அதற்கான எளிமையான வழிபாடு தான் இது.

- Advertisement -

இதற்குள்ளும் ஒரு சூட்சமத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாகவே பிள்ளையாருக்கு இனிப்பு என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் எல்லோராலும் நினைத்தவுடன் இனிப்பு வைத்து பிள்ளையாருக்கு வழிபாடு செய்ய முடியாது. அதிலும் கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்கும் அல்லவா. மோதக முத்திரை என்று ஒன்று இருக்கிறது. கையை குழித்து வைத்துக் கொண்டால் அதுதான் மோதக முத்திரை.

இரண்டு கையையும் ஒன்றாக குழித்து வைத்துக்கொண்டு, இறைவனிடம் யாசகம் கேட்போம் அல்லவா. அதேபோல வலது உள்ளங்கைகளை மட்டும் குவித்து வைத்துக் கொண்டால், அது மோதகத்திற்கு சமமானது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய கைகளை இப்படி குழித்து வைத்துக்கொண்டு, விநாயகரிடம் இந்த மந்திரத்தைச் சொல்லும் போது இனிப்பு கொழுக்கட்டையோடு சேர்த்து மந்திரத்தை சொன்ன பலன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: தடைகளை தகர்த்தெறியும் குலதெய்வ தீபம்

நம்பிக்கை உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த வழிபாட்டை தொடருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்