நல்ல வேலை கிடைக்க முருகரை எந்த கிழமையில் வழிபாடு செய்யணும்.

murugan11
- Advertisement -

மனதிற்கு பிடித்த வேலையாக கிடைத்தால், சம்பளம் குறைவாக இருக்கிறது. சம்பளம் நிறைய கிடைக்கக்கூடிய வேலை, மனதிற்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது. மனதிற்கு பிடித்த வேலையாகவும் இருக்க வேண்டும். கை நிறைய சம்பளமும் கிடைக்க வேண்டும் என்பவர்கள் முருகப்பெருமானை இந்தக் கிழமையில் வழிபாடு செய்யுங்கள். எனக்கு வேலையே கிடைக்கவில்லை.

எந்த வேலை கிடைத்தாலும் போதும் மாதம் குடும்பத்தை நடத்த வருமானம் தேவை என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைப்பது உறுதி. அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வேலை கிடைக்க முருகன் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று 6 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும். முருகா எனக்கு நல்ல வேலையை கொடு என்று சொல்லுங்கள்.

முருகனிடம் உரிமையோடு உங்கள் மனதில் இருக்கும் குறைகளை சொல்லுங்கள். முருகன் நிச்சயம் செவி கொடுத்து கேட்பான். அந்த பிரச்சனையை நிச்சயம் கூடிய விரைவில் தீர்த்து வைப்பான். ‘ஓம் ஸ்ரீம் சரவணபவ’ என்ற மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே முருகப்பெருமானை 6 முறை வலம் வந்து, முருகப்பெருமானை நமஸ்காரம் செய்து கொஞ்ச நேரம் அந்த முருகனின் முன்பாகவே அமர்ந்து, முருகனை பார்த்து பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். நல்ல வேலை கிடைக்க, வேலையில் இருக்கும் பிரச்சனைகள் சரியாக ஞாயிற்றுக்கிழமை தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். காலை 6 மணி முதல் 7 மணி குள் இந்த வழிபாட்டை செய்ய முடியாது என்பவர்கள் மாலை 6:30 மணிக்கு மேல் முருகன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும். இருக்கும் வேலையிலேயே இருந்து, ஒரே சம்பளத்திலேயே ரொம்ப நாள் நாட்களை ஓட்டி இருப்பார்கள். ஒரு முன்னேற்றம் கிடைக்காதா, சீனியராக இருக்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு முருகா என்று வேண்டிக் கொண்டு முருகப் பெருமானுக்கு தலையில் கிரீடம் கட்டுவதற்கு துண்டு வாங்கி கொடுங்கள், சில கோவில்களில் கிரீடமாக பூவால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை வைப்பார்கள். அதை வாங்கி கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் நொச்சி வேர் பரிகாரம்

அப்படி இல்லை என்றால் முருகனுக்கு அழகான மாலை வாங்கி தருவதாக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இப்படி வேண்டுதல் வைத்தால் கூடிய சீக்கிரம் உங்களுக்கு வேலையில் பிரமோஷன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும் எளிமையான இந்த முருகர் வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்

- Advertisement -