நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கூட, 3 வாரத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஹனுமனை இப்படி வழிபாடு செய்தால்!

hanuman

வேலையே இல்லாமல் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருபவர்கள், இருக்கின்ற வேலையிலிருந்து நல்ல வேலையைத் தேடிக் கொண்டு, நல்ல முன்னேற்றத்துடன் வேறு ஒரு வேலைக்கு மாற வேண்டும் என்று நினைப்பவர்கள், அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள் எல்லோருமே இந்த பரிகாரத்தை செய்யது பலனடையலாம். பொதுவாகவே ஒருவருடைய வாழ்க்கையில் தீராத கஷ்டங்களின் மூலம் துயரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், அதற்கு அவர்களுடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்களும், கிரக நிலைகளும் தான் முதல் காரணமாக இருக்க முடியும். அந்த தோஷங்கள் கிரக நிலைகளை சரி செய்யக் கூடிய சக்தி இந்த அனுமன் வழிபாட்டிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

hanuman-sivan

இது நடக்கவே நடக்காது என்று சொன்ன சில காரியங்களைக் கூட நடத்திக்காட்ட வேண்டும் என்றால், நாம் அனுமனின் பாதங்களைப் பற்றிக் கொள்வது தான் சரியான வழி. நல்ல வேலை கிடைக்க வேண்டும், என்ற பிரார்த்தனை மட்டுமல்ல மற்ற வேறு எந்த பிரார்த்தனையாக இருந்தாலும் சரி, மனமுருகி அனுமனிடம் வேண்டுதல் வைத்தால் அது உடனே நிறைவேறிவிடும். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

சரி, கிரக தோஷத்தால் நம்முடைய நேரம் சரியில்லாத காரணத்தினால் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருபவர்கள் அனுமனை எப்படி வழிபடலாம்? காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு கோதுமை மாவால் ஏதாவது ஒரு பிரசாதத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். கோதுமை மாவில் சப்பாத்தி செய்து எடுத்துக் கொள்ளலாம். கோதுமையில் இனிப்பு வகைகள் செய்து எடுத்துக் கொள்ளலாம். இப்படியாக உங்களால் கோதுமை மாவில் என்ன பலகாரம் தயார் செய்ய முடியுமோ அதை தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

wheat

ஆனால் நீங்கள் எந்த பிரசாதத்தை செய்தாலும் அந்த பிரசாதத்தில் கொஞ்சமாக வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி செய்து விட்டு அதன் மேல் கொஞ்சம் நெய் தடவிக் கொண்டாலும் போதும். கோதுமை மாவில் நெய் சேர்த்து வெல்லம் சேர்த்து ஹல்வா தயார் செய்து கொண்டாலும் நல்லதுதான்.

- Advertisement -

ஹனுமன் கோவிலுக்கு சென்று கோதுமை மாவால் செய்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, மனதார உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்பு ஹனுமனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை எடுத்து, முடிந்தவரை பசியோடு இருப்பவர்கள் யாரேனும் ஒருவருக்காவது தானமாக கொடுக்க வேண்டும். அந்தப் பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்வதில் தவறு இல்லை. இருப்பினும் பசியோடு இருப்பவர்களுக்கு கொடுக்கும் அன்னதானம் நமக்கு பல நல்ல பலன்களை தேடித்தரும்.

vellam

3 வாரங்கள் சனிக்கிழமை தொடர்ந்து இந்த வழிபாட்டினை அனுமனை வேண்டி செய்து வந்தாலே போதும். நிச்சயமாக உங்களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடும். அது அரசாங்க வேலையாக கிடைக்கலாம் அல்லது தனியார் வேலையாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் வருமானத்திற்கும் ஒரு வழி கிடைத்து விடும்.

சரிங்க இந்த பிரசாதத்தை எல்லாம் செய்து அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது என்பவர்களுக்கு மற்றொரு வழியும் சுலபமாக சொல்லப்பட்டுள்ளது. வேலை கிடைக்க வேண்டுமென்றால் சூரிய பகவானின் அனுக்கிரகத்தை நாம் பெற வேண்டும். தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கும் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் காலையில் செய்யக்கூடிய அந்த சூரிய நமஸ்காரத்தை ஏதாவது ஒரு சிவன் கோவிலில் போய் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சிவன் கோவிலில் சூரிய பகவானை நினைத்து, சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் கூடிய விரைவில் நிச்சயமாக நல்லவேளை சீக்கிரமே கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.