கடும் தீயிலும் கருகாத நந்தியின் மாலை – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதிசயம்

Nandhi-in-madurai-meenatchi-amman-temple
- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்தால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்ட தட்ட 7000 சதுர அடியில் இருந்த வீர வசந்தராயர் மண்டபம் முழுமையாக இதில் சேதம் அடைந்துள்ளது. கலைநயம் வாய்ந்த தூண்கள், பழமை வாய்ந்த சிற்பங்கள் என பலவும் சேதம் அடைந்துள்ளன.

Nandhi

சேதமடைந்த மண்டபமானது 16 ஆம் நூற்றாண்டில் வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. மிகப்பெரிய தீ விபத்தில் அங்கிருந்த நந்தியின் சிலையும் சிக்கியது. ஆனால் அதிசயம் என்னவென்றால் அந்த நந்தி சிலையின் கழுத்தில் இருந்த பூ மலையானது சிறிதும் பொசுக்குக்காமல் போட்டது போட்டபடியே இருந்ததை கண்ட பக்தர்களுக்கு சோகத்திலும் ஒரு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

- Advertisement -

இந்த நந்தி சிலையின் விஷேஷம் என்ன வென்றால், வறட்சி காலங்களில் மழை வேண்டி இந்த நந்திக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். நந்தியை சுற்றி ஒரு தொட்டி இருக்கும், அந்த தொட்டியில் நந்தி மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி மழை வேண்டி வழிபாடு செய்யப்படும். நந்தி தேவரும் பக்தர்களின் வேண்டுதலை ஏற்றும் மழை பொழிய வைப்பார் என்பது ஐதீகம். இப்படி பல சிறப்புகள் பெற்ற நந்தி சிலைக்கோ அவர் கழுத்தில் இருந்த பூ மாலைக்கோ எந்த ஒரு தீங்கும் நேராமல் இருந்தது உண்மையில் அவரின் சக்தியை உணர்த்துகிறது.

Nandhi maalai

இதையும் படிக்கலாமே:
தேசிங்கு ராஜாவின் குலதெய்வ கோவில் ஒரு விசிட்

இந்த தீ விபத்தில் 500 கும் மேற்பட்ட புறாக்களும், தேருக்கு உபயோகிக்கும் மூங்கில்களும், கயிறும் கருகின. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த மண்டபம் முற்றிலும் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -