- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல நன்மைகளும் ஏற்பட பௌர்ணமி பரிகாரம்

சகல நன்மைகளும் ஏற்பட பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

பௌர்ணமி என்றாலே அது மிகவும் சிறப்புக்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி மாத பௌர்ணமி என்பது அம்மனுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த ஆடி மாத பௌர்ணமி என்பது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்னும் பட்சத்தில் அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்படி பல அற்புதப் பலன்களை கொண்டிருக்கக் கூடிய இந்த ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சகல நன்மைகளும் ஏற்பட பௌர்ணமி பரிகாரம்

பௌர்ணமி தினங்களில் பல வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்வதை வழக்கமாக பலரும் வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் பௌர்ணமி தினம் என்பது அதிசக்தி வாய்ந்த தினமாக கருதப்படுவது தான். அன்றைய தினத்தில் நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு பலன் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நாம் பௌர்ணமி தினத்தை மிகவும் முக்கியமான தினமாக கருதி வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து கொண்டு வருகிறோம்.

- Advertisement -

அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய நன்மைகளை நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை நீங்கி நன்மைகள் உண்டாவதற்கு செய்யக்கூடிய இனிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம். இந்த பரிகாரத்தை பௌர்ணமி திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது என்பது மிகவும் சிறப்பு.

இதற்கு ஒரு மஞ்சள் நிற துணி ஒன்று வேண்டும். மஞ்சள் நிற துணி இல்லை என்பவர்கள் வெள்ளை நிற துணியில் மஞ்சளை தடவி காய வைத்து அந்த துணியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு ஒரு மஞ்சள் துணியை விரித்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை சேர்க்க வேண்டும். பிறகு அதில் 5 மிளகை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இதில் ஒரு விரலி மஞ்சள் சேர்த்து, ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். இப்படி மூட்டையாக கட்டி முடித்த பிறகு இதை உங்களுடைய கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டி முடித்து விட்டு இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் உங்களுடைய நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

தினமும் வீட்டில் தீபம் ஏற்று வழிபாடு செய்யும் பொழுது இந்த மூட்டைக்கும் ஊதுபத்தி சாம்பிராணி காட்ட வேண்டும். அடுத்த மாதம் பௌர்ணமி வரும் பொழுது இதில் இருக்கக்கூடிய பொருட்களை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக பொருட்களை வைத்து கட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் நுழையாது. மேலும் வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து தடைப்பட்டு இருக்கக்கூடிய அனைத்து விதமான சுப காரியங்களும் தடை இன்றி நடைபெறும்.

இதையும் படிக்கலாமே : செல்வ செழிப்பு உயர ஆடி பௌர்ணமி அன்று செய்ய வேண்டியது

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை பௌர்ணமி தினத்தில் செய்து குலதெய்வத்தின் அருளை பெற்று வீட்டில் சுப நிகழ்ச்சிகளை எந்தவித தடையும் இன்றி நடத்தலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்