பிறந்த நட்சத்திரத்தன்று இதையெல்லாம் நீங்கள் செய்தால், உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேற்றம் என்பதே இருக்காது. பிறந்த நட்சத்திரத்தன்று செய்யவே கூடாத காரியங்கள் என்னென்ன?

nakshathram
- Advertisement -

சில காரியங்களை சில தினங்களில் நாம் தொடங்கி இருப்போம். அது நம்மை அறியாமலே எதிர்பாராத நல்ல பலன்களை கொடுத்திருக்கும். சில சமயங்களில் சில காரியங்களை சில தினங்களில் தொடங்கி இருப்போம். அது நம்மை அறியாமலேயே பல கெடுதல்களை கொடுத்துவரும். சில சமயங்களில் நாமே நம்மை திட்டிக் கொள்வது உண்டு. ‘எந்த நேரத்தில் இதை செய்யத் தொடங்கினோமோ என்று தெரியவில்லை. விடாமல் இழுத்துக் கொண்டே வருகின்றது.’ என்று! இப்படிப் பட்ட கஷ்டங்கள் வருவதற்கு காரணம் நாள் நட்சத்திரம் கிழமை பார்க்காமல் நல்ல காரியங்களை தொடங்குவதால் தான். நாள் நட்சத்திரம் சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த பதிவு.

எல்லோருக்குமே பிறந்த நட்சத்திரம் என்று ஒன்று இருக்கும். 27 நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் தான் கட்டாயம் நாம் பிறந்திருப்போம். அந்த நட்சத்திர தினத்தன்று நாம் எந்த விஷயங்களை செய்யக்கூடாது, என்று சாஸ்திரம் கூறுகிறது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

முதன்முதலாக நீங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று செய்யக்கூடாத ஒரு காரியம் என்றால் அது கடன் வாங்குவது தான். உங்களுடைய பிறந்த நட்சத்திர தினத்தன்று கடன் வாங்கினால் அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதேபோல் உங்களுடைய நட்சத்திர தினத்தன்று உங்கள் கைகளால் அடுத்தவர்களுக்கு கடன் தொகையைக் கொடுத்தால் அதை வசூல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். பணக் கஷ்டத்தால் அவதிப்படுவீர்கள்.

முடிந்த வரை ஜென்ம நட்சத்திர தினத்தன்று பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் அலுவலகம் செல்வது, தினம்தோறும் பணிக்காக வெளியிடங்களுக்குச் செல்வது என்பதெல்லாம் கணக்கு கிடையாது. வீட்டில் இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு தூரமாக பிரயாணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த ஜென்ம நட்சத்திர நாளை தவிர்த்துக் கொள்வது நன்மை தரும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று நீண்ட பிரயாணம் செய்தால் என்ன ஆகும்? தேவையற்ற சில தடைகள் உண்டாகும் அவ்வளவு தான்.

- Advertisement -

ஒரு வியாதிக்கு தீர்வுகாண புதியதாக மருத்துவமனைக்கு ஜென்ம நட்சத்திர நாள் அன்று செல்லக்கூடாது. நோய் தீர முதன்முதலாக மருந்து சாப்பிடும் அந்த நாள் ஜென்ம நட்சத்திரமாக இருக்கக் கூடாது. ஜென்ம நட்சத்திரம் அன்று அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ளக் கூடாது. குறிப்பாக முக்கியமாக ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் நாளை குறிக்கக் கூடாது.

சிலருக்கு நாள் கிழமை ராசி நட்சத்திரம் இவைகளில் நம்பிக்கை இருக்கும். சிலர் இவைகளை மூடநம்பிக்கை என்று சொல்லுவார்கள். இருப்பினும் நம்முடைய முன்னோர்கள் சில விஷயங்களை காரண காரியங்கள் இல்லாமல் நமக்கு சொல்லித் தரவில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நிச்சயமாக நல்லது நடக்கும் என்று கருத்தை முன் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -