வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இந்த எண்ணெய் போதும்

narai-mudi-1

பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தங்களுடைய வயது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய வயதை வெளியில் சொல்லவே மாட்டார்கள். ஆனால் நமக்கு வயதாகி விட்டது என்பதை பளிச்சென்று முதலில் வெளியே காட்டுவது வெள்ளைமுடி தான். இதனாலேயே இந்த வெள்ளை முடியை, கருப்பாக மாற்றப் பார்ப்பார்கள். கருப்பாக மாற்ற ரசாயனம் கலந்த கலவைகளை பயன்படுத்துவார்கள். சிலபேருக்கு இந்த வெள்ளை முடி, சிறு வயதிலேயே வந்துவிடும். சிலபேருக்கு வயதானாலும் அவ்வளவு எளிதில் முடி நரைக்காது. இது அவரவர் உடல் சூழ்நிலையைப் பொறுத்தது. உங்களுக்கு சீக்கிரமே நரை முடி வந்து விட்டதா? அதை நிரந்தரமாக கருப்பு நிறத்தில் மாற்ற இயற்கையாகவே நம் வீட்டிலிருந்தே ஒரு எண்ணையை தயாரித்துக் கொள்ளலாம். அந்த எண்ணையை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

narai-mudi-2

இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகப்பொடி-2ஸ்பூன்
மருதாணி இலை பொடி-2 ஸ்பூன்
அவுரி இலை பொடி-2 ஸ்பூன்
நெல்லிக்காய் பொடி-3 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-150ml. கருவேப்பிலை-ஒரு கைப்பிடி அளவு.

இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். கருஞ்சீரகப் பொடி கிடைக்காதவர்கள், கருஞ்சீரகத்தை மளிகை கடையில் இருந்து, முழுசாக வாங்கி, வாணலில் போட்டு நன்றாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம். தூளாக கிடைத்தால் அந்தத் தூளை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதேபோல் நெல்லிக்காய் தூளையும் வாணலில் போட்டு கரு நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சையாக இருக்கும் கருவேப்பிலையை காய்ந்த வாணலியில் போட்டு வறுத்து எடுத்தால் மொறுமொறு என்று மாறிவிடும். உளர்ந்த அந்த கறிவேப்பிலையை, மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம். (கண்டிப்பாக கருஞ்சீரக பொடியையும், நெல்லிக்காய் தூளையும், கறிவேப்பிலையையும் வறுத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.)

பின்பு ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகத்தூள், மருதாணித் தூள், அவுரி இலை தூள், நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை பொடி இவை அனைத்தையும் மேல் குறிப்பிட்ட அளவின் படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு எல்லாக் பொடிகளையும், ஒரு கரண்டியால் கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு 150ml தேங்காயெண்ணையை, எடுத்து இந்த பொடியுடன் சேர்த்து கட்டி பிடிக்காமல் கலந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

- Advertisement -

அதன் பின்பு டபுள் பாய்லிங் என்று சொல்லப்படும் முறையில் சூடுபடுத்த வேண்டும். அதாவது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணிரை சூடுபடுத்தி, அதன் பின்பு அந்த சுடுதண்ணியில் இந்த கலவையை வைத்து, 15 நிமிடம்வரை சூடுபடுத்த வேண்டும். சுடு தண்ணீரில் இருந்து கீழே இறக்கி வைக்கப்பட்ட அந்த எண்ணை, நன்றாக ஆறிய பின்பு, ஒரு வடிகட்டியில் திப்பியிலிருந்து எண்ணையை வடிகட்டி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

men-hair

இந்த எண்ணெயை தினந்தோறும் உங்களது தலையில் தடவிக் கொண்டு வந்தால், வெள்ளை நிற முடி கூடிய விரைவில் கருப்பு நிறமாக மாறும். இதை தொடர்ந்து செய்தால் மட்டுமே பலன் உண்டு. தலையில் மீண்டும் வளரக்கூடிய முடிகள் கருப்பு நிறத்தில் வளரக் கூடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நீங்களே நினைத்தாலும் வேறு எண்ணைக்கு மாறமாட்டார்கள். அவ்வளவு பலனைத் தரும் இந்த எண்ணெயின் பயன்பாட்டை உபயோகப்படுத்தினால் மட்டுமே உணரமுடியும்.

இதையும் படிக்கலாமே
பியூட்டி பார்லருக்கு போக முடியவில்லையா? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, 1/2 மணி நேரத்தில் ஃபேசியலை முடித்துவிடலாம்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Narai mudi hair oil Tamil. Narai mudi karupaga. Narai mudi poga tamil. Narai mudi karupaga mara tips in Tamil. Narai mudi karupaga oil.