நவகிரகங்களும் உங்கள் வீடு தேடி வந்து ஆசிர்வாதம் செய்யும். நவகிரக தோஷம் விலக இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும்.

vinayagar-navagragam

இறைவழிபாட்டில் எவ்வளவு தான் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும், பூஜை புனஸ்காரங்களில் எவ்வளவு தான் ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தாலும், நவகிரகத்தினால் ஏற்படக்கூடிய தோஷங்களை, தாக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் விதி. நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப நம்முடைய ஜாதக கட்டத்தில், நவகிரகங்கள் அமைகின்றது. ஒருவருடைய வாழ்க்கையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நல்ல ஜோதிடர்கள் ஜாதகத்தை வைத்து கணித்து விடுவார்கள். ஜாதக கட்டத்தில் இருக்கும் நவ கிரகங்களால், ஏற்படக்கூடிய தோஷங்கள் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

navagragam

எந்த கிரகங்களுமே நமக்கு கெடுதலை மட்டும் கொடுப்பது கிடையாது. எந்தெந்த காலகட்டத்தில், நமக்கு எது தேவையோ, அதை அந்த தக்க சமயத்தில் கொடுக்கும் சக்தி வாய்ந்தவை தான் நவகிரகங்கள். இந்த நவகிரகங்களை நம் வீட்டில் நினைத்து பூஜை செய்யலாமா? என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. தாராளமாக நம்முடைய வீட்டில் நவகிரகங்களை மனதார நினைத்து பூஜை செய்யலாம். அதில் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது என்ற சந்தேகத்தையும் இந்த இடத்தில் நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு வீடாக இருந்தாலும் கட்டாயம் விநாயகரின் திருவுருவப்படம் இருக்கும். விநாயகரின் திருவுருவப் படத்தை வைத்துக்கொண்டு நவகிரக வழிபாடு செய்வது என்பது நமக்கு சிறப்பான பலனை தேடித்தரும் என்று சொல்கிறது சாஸ்திரம். உங்களுடைய வீட்டில் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பூஜையை நீங்கள் செய்யலாம். பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, வீட்டில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்து விடுங்கள்.

navagragha-mandhiram

உங்களுடைய வீட்டில் இரும்பாலான எச்சில் படாத பாத்திரம் ஒன்றை இந்த பரிகாரத்திற்க்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்பு கிண்ணம், இரும்பு தட்டு எதுவாக இருந்தாலும் சரி, அதில் நவதானியத்தை கொட்டி பூஜை அறையில், தரையில் ஒரு மரப்பலகை போட்டு, அதன் மேல் இரும்பு தட்டில் நவதானியத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த நவதானியத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தீபம் நவதானியத்தை நோக்கி எரிய வேண்டும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் எந்த கிரகத்தின் மூலம் தோஷம் இருந்தாலும் சரி, நீங்கள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்யலாம். இந்த பூஜையில் நவ கிரகத்திற்கு உண்டான இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான நவகிரக தோஷம் நீக்கும் மந்திரம் இதோ!

navadhaniyam

சூரியன், சோமன், செவ்வாய்
சோற்புதன், வியாழன், வெள்ளி
காரியும், ராகு, கேது
கடவுளர் ஒன்பா னாமத்

தாரியல் சக்க ரத்தைத்
தயவுடன் பூசித் தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!

navagraham-jathagam

மந்திரங்கள் எல்லாம் உங்களுக்கு உச்சரிக்க வராதா? நவகிரகத்தின் 9 பெயர்களை உச்சரித்து கொள்ளுங்கள் போதும். எதுவுமே எங்களுக்கு தெரியாது என்று சொல்பவர்கள், வாரம் தோறும் வரும் ஞாயிறு திங்கள் செவ்வாய், என்ற ஏழு நாட்களை உச்சரித்து விட்டு, இறுதியாக ராகுவையும் கேதுவையும் நினைத்து அவர்களின் பெயர்களை உச்சரித்து விடுங்கள். அவ்வளவுதான், நவகிரகங்கள் இதனுள் அடங்கி விட்டது.

நவகிரகங்களை மனதார வேண்டிக் கொண்டு, நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அதன்பின் அந்த நவதானியங்களை எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிடலாம். இவ்வாறாக உங்களால் முடிந்தால் இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்யுங்கள். முடியாதவர்கள் வெறும் 11 நாட்கள் செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். எந்த கட்டாயமும் கிடையாது.

navagraham-vinayagar

நவகிரகத்தின் ஆசிர்வாதத்தை பெறப் போகின்றோம். வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் துயரங்கள் காணாமல் போவதற்கு நவகிரகங்களின் ஆசீர்வாதமும் அவசியம் தேவை. இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தவர்கள் பலன் அடைந்து உள்ளார்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.