கிரக தோஷங்களை போக்கும் நவகிரக போற்றி

navagrahams-compressed

விண்ணில் பல கோடிகணக்கான நட்சத்திரங்களும், கிரகங்களும் இருக்கின்றன. இதில் சூரியன் முதல் சனி வரையான கிரகங்கள், நிழல் கிரகங்களான ராகு – கேது ஆகிய நவகிரகங்கள் பூமியில் வாழும் மனிதன் உட்பட அனைத்து உயிர்களின் மீதும் ஒரு வலுவான ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இதில் நவகிரகங்களின் மாறுபாடுகளால் தோஷங்கள் ஏற்பட்டு பல துன்பங்கள், வேதனைகளை அனுபவிப்பது மனிதர்கள் மட்டுமே. அவற்றை நீக்கும் சிறந்த நவகிரக போற்றி துதி இதோ.

நவகிரக போற்றி

ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி
ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி
ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி
ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி
ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி
ஓம் பொற்ப்பட்டுடையி பொழிவாய் போற்றி
ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி
ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி
ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி
ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி
ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி
ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி
ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி
ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி
ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி
ஓம் முத்துவிமான வாகனா போற்றி
ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி
ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி
ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி
ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி
ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி
ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி
ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி
ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி
ஓம் பூதேவி குமரா பெளமா போற்றி
ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி
ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி
ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி
ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி

ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி
ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி
ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி
ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி
ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி
ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி
ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி
ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி
ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி
ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி
ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி
ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி
ஓம் இளையை மணந்த எழிலே போற்றி
ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி
ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி
ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி
ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி
ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி
ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி
ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி
ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி
ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி
ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி
ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி
ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி
ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி
ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி
ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி
ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி
ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி
ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி
ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி

- Advertisement -

Navagraham

ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி
ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி
ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி
ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி ஓம்
தவமேம் பட்ட தலையே போற்றி ஓம்
இராஜபோகம் தரு இராகுவே போற்றி ஓம்
இராகுவினுடலே கேதுவே போற்றி
ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி
ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி
ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி
ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி
ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி
ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி
ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி
ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி
ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி
ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி

navagragham

பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நவகிரக நாயகர்களை போற்றும் போற்றி துதி இது. ஆற்றல் மிக்க இந்த நவகிரக போற்றி துதியை தினமும் காலையில் ஒரு முறை துதிப்பது சிறப்பான பலன்களை தரும். சனிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், அருகிலுள்ள கோயிலில் இருக்கும் நவகிரக சந்நிதியில் நவகிரகங்கள் அனைவருக்கும் விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி அச்சந்நிதியிலே நின்று இந்த போற்றி துதியை படித்து 9 முறை வலம் வந்து வணங்குவதால் நவகிரக தோஷங்கள், பாதகமான கிரக கோச்சாரங்களினால் ஏற்படும் கெடுபலன்கள் ஆகிய அனைத்தும் நீங்கி நன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம்.

பிரபஞ்சம் என்பது எல்லையில்லாதது. இப்போது நாம் வாழும் இந்த பூமி, வெளிச்சத்தை தரும் சூரியன் சந்திரன் உட்பட நவகிரகங்கள், நட்சத்திரங்கள் என அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒருவகையான தொடர்பு கொண்டதாக இருக்கின்றன என நவீன மேலை நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த உண்மைகளை கண்டு பிடித்த நமது சித்தர்களும், ரிஷிகளும் பூமிக்கு நெருக்கமாக உள்ள நவகிரகங்களும் பூமியில் உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்கிற உண்மையை கண்டுபிடித்து, கெடுபலன்கள் ஏற்படாமல் இருக்க பல மந்திரங்கள், வழிபட்டு முறைகளை கண்டுபிடித்தனர்.

இதையும் படிக்கலாமே:
மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Navagraha potri in Tamil. It is also called Navagraha mantras in Tamil or Navagraha thuthi manthirangal in Tamil or Navagraha slokas in Tamil or Navagragangal mantram in Tamil or Navagraham thuthi in Tamil.