வேப்பிலை, கருவேப்பிலை ஹேர் பேக்

neem and curry leaves
- Advertisement -

தலைமுடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் தலைமுடியை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளாதது மிகவும் முக்கியமான காரணமாக திகழ்கிறது. மேலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததும் ஒரு வகையில் காரணம் தான். தலைமுடிக்கு ஏற்படக்கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த இரண்டு இலைகள் இருந்தால் போதும். அந்த இலைகளைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நம்மை சுற்றி இருக்கக்கூடிய பல இயற்கையான பொருட்களின் அருமை பலருக்கும் தெரியாமலே போகிறது. அப்படியே தெரிந்தாலும் அதை உபயோகப்படுத்துவது கிடையாது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் இலைகள் தான் கருவேப்பிலை மற்றும் வேப்பிலை. கருவேப்பிலையில் இல்லாத சத்தே கிடையாது. இதை உணவாக எடுத்துக் கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைக்கு தடவினால் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

- Advertisement -

வேப்பிலை சொல்லவே வேண்டாம் கிருமி நாசினி. நம்முடைய தலையில் இருக்கக்கூடிய கிருமிகளை நீக்கி தலைமுடியை வேகமாக வளர செய்ய உதவும். மேலும் தலைமுடி உதிர்தலையும் நிறுத்துகிறது. இவை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய ஹேர்பாக்கை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் கருவேப்பிலையை நன்றாக அலசி தூசி இல்லாமல் கழுவி மிக்ஸி ஜாரில் போட வேண்டும். பின்னர் வேப்பிலையையும் அதே போல கழுவி தூசி இல்லாமல் மிக்ஸி ஜாரில் போட வேண்டும். பின்னர் அந்த கருவேப்பிலை மற்றும் வேப்பிலை நன்றாக அரைவதற்கு அதன் கூடவே சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நன்றாக அரைப்பட்ட பிறகு ஜாரில் இருந்து ஒரு சிறிய கப்பில் எடுத்துக்கொண்டு பின்னர் அதனை உங்கள் முடியின் அனைத்து இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து பின்னர் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் முடியில் எல்லா இடங்களிலும் தேய்க்க வேண்டும். தேய்த்து ஒரு 20 நிமிடம் கழித்து நன்றாக கழுவி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் முடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். வேர்கள் முற்றிலும் வலிமையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பொதுவாகவே கருவேப்பில்லையின் பயனால் முடி நீளமாக வளரும். அதேபோல வேப்பில்லை உடம்பில் இருக்கும் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக்கும். இந்த பேக் முடிக்கு மட்டும் அல்லாமல் உடல் நிலைக்கும் நல்லது.

- Advertisement -

பொதுவாக பலரும் சொல்வதுண்டு. முடி இல்லாதவர்கள் நான் தினமும் என்னை தேய்த்து வருகிறேன், நன்றாக தலை தேய்த்து குளிக்கிறேன், கண்ட கண்ட ஷாம்பு ஹார் பேக் என்று அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன். இருந்தாலும் எனக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படும் அனைவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பொலிவான முகத்தைப் பெற அழகு குறிப்பு

இந்தப் பதிவின் முன்னோக்கம் ஒன்றுதான் இயற்கையாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் விட்டுவிட்டு செயற்கையாக கெமிக்கல் சேர்க்கும் பொருட்களை ஏன் பயன்படுத்த வேண்டும்? எனவே நம் வீட்டிலேயே இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி முடியை ஆரோக்கியமாக வளரச் செய்யலாம்.

- Advertisement -