பல நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு, வெறும் 11 நாட்களில் தீர்வு! 3 கிராம்பு போதும், 3 தலைமுறை கடனையும் சுலபமாக அடைந்து விடலாம்.

cash-kirambu

ஏதாவது ஒரு கஷ்டமான சூழ்நிலையில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடன் வாங்கும் நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். கடன் இல்லாமல் இந்த உலகத்தில் மனித பிறவிகள் நிச்சயமாக வாழ முடியாது. நம்முடைய மனிதப் பிறப்பே ஒரு கடன் தான். பிறவிக் கடனை தீர்க்கத்தான் இந்த பூலோகத்தில் மனிதராக அவதாரம் எடுத்து இத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றோம். நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை மாற தேவைகள் அதிகரித்து கொண்டே தான் வருகின்றது. வருகின்ற வருமானத்திற்கு ஏற்றபடி செலவுகளை கட்டுப்படுத்தாமல் அனாவசிய தேவைகளுக்காக கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

kadan

நீங்கள் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா? நீண்ட நாட்களாகியும் வருடக்கணக்கில் கடனுக்கு வட்டி தொகையை மட்டும்தான் செலுத்த முடிகிறதா? முதல் தொகையை செலுத்துவதற்கான நேரமே அமையவில்லை என்றால் என்ன செய்வது? நிறைய பேர் தங்களுடைய அப்பா தாத்தா வாங்கிய கடனைக் கூட திருப்பிக் கொடுக்க முடியாமல் இன்றளவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்படிப் பட்டவர்களும் இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கிராம்பு. பண ஈர்ப்பு விதிக்கு வாசனை மிகுந்த இந்த கிராம்பு, பட்டை, பிரியாணி இலை ஏலக்காய் போன்ற பொருட்களை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே வாசனை மிகுந்த பொருட்களுக்கு இயற்கையாகவே ஒரு சக்தி உண்டு. நாம் எதை மனதார நினைத்து சொல்கிறோமோ அதை அந்த வாசனை மிகுந்த பொருட்கள் விரைவாக தனக்குள் கிரகித்துக் கொண்டு நான் நினைத்ததை நிறைவேற்றி தந்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

krambu

அதனால்தான் எந்த ஒரு பரிகாரத்திற்கும், குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பரிகாரத்திற்கு இந்த வாசனைப் பொருட்களை தாந்திரீக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள். கடன் பிரச்சினை பணப் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து 11 நாட்கள் இப்படி செய்து வர வேண்டும். தினமும் இரவு தூங்கப் போவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

முதலில் 3 கிராம்புகளை எடுத்து உங்களது இடது கையில் வைத்துக் கொண்டு உங்கள் கடன் கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ஆழ்மனதில் இருந்து சொல்லுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கற்பூரம் சூடம், 3 கிராம்பை போட்டு எரித்து விடுங்கள். அந்த மூன்று கிராம்பும் அந்த கற்பூரத்தில் எரிந்து பொசுங்கும் வரை உங்களது கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதுக்குள் உச்சரித்து கண்களை திறந்த படியே தியானம் செய்ய வேண்டும்.

neruppu

அப்போது உங்களுடைய கண்கள் கிராம்பு எரிவதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது, அந்த கிராம்பை உங்கள் கையில் வைத்துக்கொண்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று நீங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதலை அந்த கிராம்பு தனக்குள் கிரகித்துக் கொண்டிருக்கும். அந்த கிராம்பானது நெருப்பில் எரிந்து பொசுங்கும் போது அந்த கடன் பிரச்சனையும் நெருப்போடு நெருப்பாக பொசுக்கிவிடும் என்பதுதான் இதற்கான அர்த்தம்.

sudam

பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு பிரச்சினை தீர வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு உறங்க செல்லுங்கள். மறுநாள் காலை எழுந்து கடன் பிரச்சனையை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்த பரிகாரத்தை இரவு செய்துவிட்டு அதன்பின்பு கடனை அடைப்பதற்கான வேலைகளை நீங்கள் முயற்சித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய கடன் தொல்லையில் இருந்து நிச்சயமாக உங்களால் விடுபட முடியும் என்பதுதான் நம்பிக்கை. முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.