தண்ணீருக்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்ப்பு தெரியுமா ?

Mahalakshmi

இந்த பூமி பஞ்சபூத சக்திகளாலான “நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு” ஆகிவற்றால் ஆள படுகிறது. இதில் காற்று எனும் பஞ்சபூதத்திற்கு அடுத்து மரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் வாழ்வதற்கு அத்திவாசியமாக இருப்பது “நீர்” எனும் பூதமாகும். பஞ்ச பூதங்கள் அனைத்துமே இறைத்தன்மை கொண்டது என்றாலும் உயிர்களுக்கு தாகத்தை தீர்த்து, இன்ன பிற வகையிலும் உதவும் இந்த தண்ணீருக்கும் நமது வீட்டில் லட்சுமி குடிகொள்வதற்கும் சில தொடர்புகள் உண்டு அதை பற்றி இங்கு காண்போம்.

mahalakshmi

இயற்கையின் ஒரு அற்புதமான கொடை, மழை. இந்த மழைக்கு காரகனாக வருண பகவான் வேத காலங்களிலிருந்தே வழிபடபடுகிறார். இந்த மழைப்பொழிவு அதிகளவில் பெய்து ஏரிகளையும் குளங்களையும் நிரப்பி, மலைப்பகுதிகளில் அருவியாக கொட்டி, நதியாக உருவெடுத்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது. மக்களின் நலனுக்காக வருண பகவான் மழை பொழிகிர்றார். ஆனால் அதை உணராத மக்கள் அந்த நீரை தேவை இல்லாமல் வீணடித்து வருண பகவானின் கோபத்திற்கு ஆளாகின்றனர். ஈசானிய மூலையில் கிணறு வெட்டுவதில் தொடங்கி பல விதத்திலும் நீருக்கும் நமது வீட்டில் உள்ள செல்வத்திற்கும் தொடர்பு உள்ளது.

தண்ணீரை அளவுக்கு அதிகமாக வீணடிக்கும் இல்லங்களில் செல்வத்தின் முழுஅம்சமான லட்சுமி தேவி வாசம் செய்ய மாட்டாள். மேலும் செல்வ சேமிப்பில்லாமல் பல விதமான செலவுகளும் ஏற்படும். இது பல பேரின் வாழ்வில் கண்ட அனுபவ உண்மையாகும். எனவே எல்லோருமே வீட்டில் இருக்கும் தண்ணீரை வீணடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் வீடுகளில் உள்ள குழாய்கள் மற்றும் தொட்டிகளில் ஏற்படும் நீர்கசிவுகளை உடனுக்குடன் சரி செய்து விட வேண்டும். இப்போது நமது பயன்பாட்டிற்கென்று இருக்கும் நீரையும், இனி வரப்போகும் மழைக்காலங்களில் பெய்ய போகும் மழையின் ஒவ்வொரு துளி நீரையும் நமது ஒவ்வொரு நொடி மூச்சாக பாவித்து, தண்ணீரை சிக்கனப்படுத்தி நமக்கும் பிறருக்கும் உதவுமாறு செய்பவர்கள் அந்த வருண பகவானின் அருளுக்கு பாத்திரமாவார்கள். அவர்களுக்கும், அவர்கள் வாழும் ஊரிலும் நீருக்கு பஞ்சம் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே:
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? அதற்கான பரிகாரம் என்ன பார்ப்போம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have given some water tips to invite Mahalakshmi to your home. In Tamil, we can say it as Veetil Mahalakshmi Thanga tips.