கோவிலுக்கு சென்று அடிக்கடி தீபம் ஏற்றுபவர்கள் வீட்டிலேயே இப்படி நெய் தீபம் செய்து வைத்துக் கொண்டால் வேலை ஈஸியாக இருக்குமே!

- Advertisement -

கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நமக்கு சகல நன்மைகளும் நடைபெறும் என்கிற ஐதீகம் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிகாரத்திற்கு, ஒவ்வொரு தெய்வத்திடம் வேண்டிக் கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இப்படி வழிபடுபவர்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது ரொம்பவும் சுலபமாக தீபத்தை கொண்டு செல்ல நம் வீட்டிலேயே நெய் தீபம் எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

நெய் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் பொதுவாக கோவிலுக்கு சென்றதும் அங்கு இருக்கும் சிறு சிறு கடைகளில் விற்கப்படும் நெய் தீபத்தை அகலோடு சேர்த்து வாங்கிக் கொள்வது வழக்கம். அவர்கள் பயன்படுத்தும் நெய் உண்மையிலேயே நெய்யா? என்பது கூட நமக்கு தெரிவதில்லை. சுத்தமான நெய் நம்மிடம் இருக்கும் பொழுது நாமே அதை தயாரித்து வைத்துக் கொண்டால் எதற்காக அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்க வேண்டும்?

- Advertisement -

நெய் தீபம் ஏற்றக் கூடிய மோல்ட் கடைகளில் விற்கப்படுகிறது. அது கீழே அடியில் பிளாஸ்டிக் தட்டு போன்ற அமைப்புடன் உள்ளே சிறு சிறு விளக்குகள் பதிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அல்லது நீங்களே பிளாஸ்டிக் அகல் விளக்குகள் போன்ற வடிவங்களில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியும் இல்லை என்றால் மண் அகல் விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். மண் அகல் விளக்கு பயன்படுத்துவதை காட்டிலும், பிளாஸ்டிக்கில் பயன்படுத்தினால் எடுப்பதற்கு சுலபமாக வரும்.

பிளாஸ்டிக் அகல் விளக்குகளில் நீங்கள் தேவையான அளவிற்கு நெய்யை நன்கு உருக்கி சிறிது ஆறியதும் ஊற்றி கொள்ள வேண்டும். முக்கால் பாகத்திற்கு ஊற்றினால் போதும், முழுமையாக ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் இதனுள் திரி போடுபவர்கள் அப்படியே போட்டு விடாமல், திரியின் அடிப் பகுதியில் அலுமினியம் ஃபாயில் பேப்பர் இருந்தால் அதிலிருந்து சிறு துண்டு கத்தரித்து சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் முழுமையாக திரி எரிந்து போகாமல் இருக்கும்.

- Advertisement -

பின்னர் இதை அப்படியே கொண்டு போய் பிரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் நெய் கெட்டியாகிவிடும். அதன் பிறகு மோல்டு அல்லது பிளாஸ்டிக் அகல் விளக்கில் இருந்து கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி நெய்யை மட்டும் தனியாக பிரித்து எடுத்து விடுங்கள். மோல்ட் பயன்படுத்தினால் அடியில் இருக்கும் தட்டை லேசாக அழுத்தம் கொடுத்தாலே உள்ளிருந்து அழகாக விளக்கு வடிவத்தில் வெளியே வந்து விடும்.

அதன் பிறகு இதை அப்படியே வெளியில் வைத்து பயன்படுத்தக் கூடாது. இதை ஒரு ஏர் டைட் கண்டைனைர் பாக்ஸில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால், நீங்கள் அவசரத்திற்கு கோவிலுக்கு போகும் பொழுது நெய், திரி எல்லாம் தேடிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து போட்டு வெளியில் கிளம்பி விடலாம். சுத்தமான நெய்யால் தயாரிக்கப்படும் இதை வெளியில் வைத்தால் உருகி விடும், எனவே பிரிட்ஜில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் கோவிலுக்கு மட்டுமல்லாமல், வீட்டில் நெய் தீபம் ஏற்றுவதற்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -