ஓடி ஓடி உழைத்து சேர்த்த பணம் நம்மிடம் தங்காமல் போக என்ன காரணம் தெரியுமா?

மனிதராய் பிறந்த ஒவ்வொருவருடைய நாவும் எண்ணற்ற சொற்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. அதில் அப சொற்கள், அமங்கல சொற்களை பயன்படுத்துவதால் லஷ்மி தேவி நம்மிடம் குடிக்கொள்ள மாட்டாள் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? ஆம். உண்மை தான். நாம் எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும், உழைத்து சேர்த்த பணம் நம்மிடம் தங்காமல் போக இது போன்ற தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன.

speech

உங்களால் முடிந்த அளவிற்கு சுப சொற்களை பயன்படுத்தி பழகுங்கள். வழக்கத்தில் தான் எல்லாமே உள்ளது. எதுவும் முடியாது என்று கூறாதீர்கள். இதுவே முதல் வார்த்தை என்றும் சொல்லலாம். முடியாது, தெரியாது என்று கூறுவதை தவிர்த்து முயற்சி செய்கிறேன் என்றாவது சொல்லுங்கள். இதுவே தன்னம்பிக்கை வளர உந்து கோளாக இருக்கும். எந்த வார்த்தைகளை தவிர்ப்பது லக்ஷ்மி கடாட்சம் பெருக வழி வகுக்கும்? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

‘போறன்’ (போகிறேன்) என்ற சொல்லை பயன்படுத்தாமல் சென்று வருகிறேன் என்று கூறலாம். அது போல் யாரையும் பார்த்து தொளஞ்சி போ, போய் தொல என்ற சொற்களை உபயோகிக்க கூடாது.

kobam1

‘செத்து தொல’ அல்லது ‘செத்து போறன்’ என்று அடிக்கடி கூறவே கூடாது. இது மிகவும் தவறான ஒரு சொல் ஆகும். இந்த வார்த்தைகளை முக்கியமாக குடும்பத்தில் உள்ள பெண்கள் கட்டாயம் கூறவே கூடாது. இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பெருகிக் கொண்டே போகுமே தவிர குறையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வார்த்தையை பயன்படுத்துவோர் இல்லத்தில் லக்ஷ்மி தேவி குடியிருக்க மாட்டாள். பணம் தங்காது. வீண் விரயமாகி கொண்டே இருக்கும்.

- Advertisement -

எவரேனும் ஏதாவது ஒரு பொருளை உங்களிடம் கேட்டால் இல்லை என்று உடனே கூறி விடாதீர்கள். இல்லை என்ற சொல் பயன்படுத்தாமல் தீர்ந்துவிட்டது என்று கூறலாம்.

fllower

மலர் என்பது தெய்வ கடாட்சத்தின் ஒரு அம்சமாக விளங்குகிறது. எனவே இனிமே பூ வேண்டுமா? என்று யாராவது கேட்டால் அல்லது இந்த பூவை சூடி கொள்ளுங்கள் என்று தெரிந்தவர்கள் கொடுத்தால் ‘வேண்டாம்’ என்று மறுத்து விடாதீர்கள். அது லக்ஷ்மியை வேண்டாம் என்று சொல்வதற்கு சமமாக கருதப்படுகிறது. பூ கொடுத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் இன்னொரு நாள் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறலாம்.

‘சனியன்’ என்ற வார்த்தை சனி பகவானின் பிடியில் அகப்படுவதற்கு சமமான சொல் ஆகும். ஒருமுறை ஒருவர் இந்த வார்த்தையை கேட்டு விட்டால் நமக்கும் தொற்றி விடும். கவனித்து பாருங்கள் தெரியும். தொடர்ந்து இந்த வார்த்தை நமக்கும் வந்து விடும். இது தரித்திரத்தை வரவழைக்கும்.

money

தரித்திரம் பிடித்தவனே என்று கூறவே கூடாது. நம் வார்த்தை சுத்தமாக இருந்தாலே லக்ஷ்மி தேவியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிட்டும். வார்த்தை சுத்தம் இல்லையென்றால் தரித்திரம் தான் நம் இல்லத்தில், உள்ளத்தில் வாசம் செய்யும். பிறகு உழைத்தாலும் அது வீண் தான். பணம் நம்மிடம் தங்காது.

‘திங்காதே’ என்று சொல்வதை விட சாப்பிடாதே என்றே கூறலாம். சாப்பிடும் போது இது போல் பேசுவதை தவிர்க்கவும்.

‘அய்யோ’ என்ற வார்த்தையை நிச்சயம் தவிர்க்க வேண்டும். எம தர்மனின் தர்ம பத்தினியின் பெயர் தான் அய்யோ. இந்த வார்த்தையை அடிக்கடி கூறினால் எம பயம் வரும். கெட்ட சொப்பனங்கள் வரும். செல்வம் சேராது. நியாபக மறதி தோன்றி விடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்கும்.

eman

நீங்கள் மருத்துவமனை அல்லது காரியம் நடக்கும் வீட்டிருக்கு செல்ல நேர்ந்தால் அங்கிருந்து புறப்படும் பொழுது ‘போய் வருகிறேன்’ என்று சொல்லக் கூடாது. எதுவும் சொல்லாமல் கிளம்பி விட வேண்டும். அல்லது கிளம்புகிறேன் என்று சொல்லலாம்.

கெட்ட வார்த்தைகள் எதையும் எப்போதும் பயன்படுத்தவே கூடாது. குடும்ப பெண்களை பார்த்து இது போல் திட்டினால் நீங்கள் என்ன தான் சம்பாரித்தாலும் வீண் விரயங்கள் தான் ஆகும். நிறைய பணம் இருந்தாலும் தேவை இல்லாத செலவுகள் வரும். லக்ஷ்மி தேவியின் கோபத்திற்கு ஆளாகி பெரும் பண சிக்கலில் தவிப்பீர்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் உபயோகித்தால் உங்கள் வம்சமே பிரச்சனைகளை சந்திக்கும். உங்களை பார்த்து குழந்தையும் பேச கற்று கொள்ளும். இது ஒரு மோசமான செயலாகும். பெரியவர்கள் நல்ல வார்த்தைகளை பேசினால் தான் அந்த குடும்பம் சிறந்து விளங்கும். சொல்லில் இனிமை சேர்த்து வாழ்வில் வளம் பெற்று மன நிறைவுடன் இருங்கள். இந்த வார்த்தைகளை இன்றிலிருந்தே தவிர்க்க பழகி நல்லதொரு மனிதனாக ஏற்றம் பெற்று உங்கள் உழைப்பிற்கு மரியாதை செலுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Do not use these words. Thavarana varthaigal vendam Tamil. Selvam sera tips tamil. Selvam sera valigal Tamil. Thavirkka vendiya sorkkal Tamil.