- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவாரம் ஒரு முறை தவறாமல் இதை மட்டும் செய்து வந்தாலே போதும். உங்கள் முடி கருகருவென...

வாரம் ஒரு முறை தவறாமல் இதை மட்டும் செய்து வந்தாலே போதும். உங்கள் முடி கருகருவென காடு போல கட்டுக்கடங்காமல் வளர தொடங்கும்.

- Advertisement -

நிறைய பேர் மறந்துவிட்ட ஒரு ரெமிடி இது. ரொம்பவும் கஷ்டப்படாமல் ஈஸியாக முடியை வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய ரெமிடி. உடனடியாக முடிக்கு ஊட்டச்சத்தை தரக்கூடிய ரெமிடி. இரண்டு குறிப்புகள் இன்றைக்கு பார்க்கப் போகின்றோம். ஒரு ஹேர் ஸ்ப்ரே, ஒரு எண்ணெய் தயார் செய்யும் முறை. மிக மிக எளிமையான குறைந்த செலவில் இந்த இரண்டு குறிப்புகளை சுலபமாக பின்பற்றி வந்தாலே உங்களுடைய தலைமுடி வளர்ச்சி எங்கேயோ போய்விடும். கவலைப்படாதீங்க, இந்த பொருட்கள் எல்லாமே நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருட்கள் தான். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அழகு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

முடி வளர்ச்சிக்கு ஹேர் ஸ்பிரே தயார் செய்யும் முறை:
இதற்கு அரிசி வடித்த தண்ணீர், காய்ச்சிய பால் இந்த இரண்டு பொருட்கள் தேவை. அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் கொஞ்சம் லிக்விட் ஆக எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்ப கட்டியாக எடுக்க வேண்டாம். ஒரு சின்ன டம்ளர் அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் எடுத்துக் கொண்டால், அதில் பாதி அளவு, அரை டம்ளர் காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, முடி முழுவதும் ஸ்பிரே செய்து நன்றாக விரல்களை வைத்து மசாஜ் செய்து 20 லிருந்து 30 நிமிடங்கள் தலையில் அதை ஊற வைத்து பிறகு வழக்கம் போல நீங்கள் தலைக்கு குளித்துக் கொள்ளலாம். இது முடிக்கு அவ்வளவு ஊட்டச்சத்துக் கொடுக்கும். பால் உங்களுடைய முடியை ட்ரை ஆக்காமல் வைத்துக் கொள்ளும்.

- Advertisement -

தலை முடி வளர்ச்சிக்கு சூப்பரான எண்ணெய் தயார் செய்யும் முறை:
விளக்கெண்ணெய். தலை முடி வளர இதை விட சிறந்த எண்ணெய் இந்த உலகத்தில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. விளக்கெண்ணெய் வைத்தால் தலைமுடி அவ்வளவு அடர்த்தியாக வளரும். உங்களுக்கு சளி பிடிக்குமா. தலை பாரம் வருமா.

விளக்கெண்ணெய் 1/4 கப், தேங்காய் எண்ணெய் 1/4 கப் இரண்டுத்தையும் சரிசமமாக கலந்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக வெந்தயம், கருவேப்பிலை இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வெதுவெதுப்பாக சூடு செய்யுங்கள். அந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே, அதை எடுத்து உங்களுடைய தலையில் நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடங்களில் இருந்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உடனடியாக உங்களுக்கு சளி பிடிக்கும் என்றால் பத்து நிமிடம் கழித்து கூட நீங்கள் தலைக்கு குளித்துக் கொள்ளலாம். வெதுவெதுப்பாக இந்த எண்ணெயை தலையில் தேய்க்கும் போது, முடி வளர்ச்சி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அதிகரிக்கும். அதே சமயம் வெதுவெதுப்பான எண்ணெயை தலையில் வைக்கும் போது, உங்களுக்கு சளி பிடிக்கக்கூடிய பிரச்சனை தலைபாரம் வரக்கூடிய பிரச்சனை குறையும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: அதிரடியான முடி வளர்ச்சியை தரும் அட்டகாசமான அரிசி ஹேர் பேக். அடுத்தவர்கள் கண்ணை பறிக்கும் அளவுக்கு கருகருமுடி காலத்துக்கும் கொட்டாமல் வளரும்.

எளிமையான இந்த இரண்டு குறிப்புகளை ரெகுலராக நீங்கள் செய்து வந்தாலே முடியை பற்றிய கவலையிலிருந்து விடுபடலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்