- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇரவு நேர சரும பராமரிப்பு

இரவு நேர சரும பராமரிப்பு

- Advertisement -

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை விட நாம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதுவும் எந்த வித சிரமமும் படாமல் எளிதில் அழகாக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளக்கூடிய இரவு நேர சரும பராமரிப்பு முறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நம்முடைய அழகை பராமரிக்க வேண்டும் என்றால் அதற்காக ஃபேஸ் பேக், ஃபேஸ் க்ரீம் என்று தயார் செய்து போடுவோம். இன்னும் சிலரோ அழகு நிலையத்திற்கு சென்று தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். இயற்கையான முறையில் பெறக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தி செய்வதன் மூலம் நம்முடைய அழகை நிரந்தரமாக நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்காக சிரமப்பட வேண்டுமே என்று நினைப்பவர்கள் இந்த பதிவில் சொல்லி இருப்பது போல் செய்தால் மிகவும் எளிமையான முறையில் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

- Advertisement -

இதில் சொல்லக்கூடிய அனைத்து ஃபேஸ் பேக்குகளும் இரவு நேரத்தில் செய்யக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு அதை ஈரம் இல்லாமல் தொடைத்து விட்டு இந்த பேஸ் பேக்கை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பன்னீரையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி நாம் தினமும் செய்து வர நம் முகத்தின் நிறம் அதிகரிக்கும். சுருக்கங்கள் மறைவதை காண முடியும்.

- Advertisement -

எலுமிச்சைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான தேனையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இது நன்றாக காய்ந்த பிறகு முகத்தை கழுவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் அனைத்தும் நீங்கும். அனைத்து வகையான சருமத்திற்கும் இது மிகவும் பொருத்தமான ஒரு ஃபேஸ் பேக்காக திகழ்கிறது.

இதே போல் வெள்ளரிக்காய் சாறு மற்றும் காய்ச்சாத பசும்பால் இவை இரண்டையும் சரிசமமாக கலந்து முகத்தில் தடவுவதன் மூலம் ப்லீச்சிங் செய்ததற்கு இணையான பிரகாசத்தை நம்மால் பெற முடியும். உருளைக்கிழங்கு சாறை எடுத்து முகத்தில் நன்றாக தடவி அது உலர்ந்ததும் அதை குளிர்ந்த நீரால் கழுவ முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்துட்டுகள் போன்றவை அனைத்தும் நீங்கும். முகக்கருமை நீங்கி பிரகாசமான முகத்தை பெற முடியும்.

- Advertisement -

ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு சிட்டிகை பட்டை பொடியை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி ஸ்கிரப் செய்வது போல் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும். முகம் பிரகாசமாக தென்படும். தயிர் மற்றும் கடலை மாவு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி அவை காய்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி மிருதுவான சருமத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: உதடு கருமை நீக்கும் கசகசா

பகல் நேரத்தில் நாம் செய்யக்கூடிய அழகு குறிப்புகளை விட இரவு நேரத்தில் செய்துவிட்டு நாம் படுப்பதன் மூலம் விரைவிலேயே நம்முடைய முகத்திற்கு நல்ல பலனை தரும்.

சற்று முன்