உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இந்த 1 பொருளை கட்டி தொங்க விட்டாலே போதும். இதில் வரும் சத்தத்தைக் கேட்டு, மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்குள் விரும்பி வந்து விடுவாள்.

nilai-vasal

மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைப்பதற்கு எத்தனை பூஜைகள், எத்தனை புனஸ்காரங்கள், எவ்வளவு கஷ்டங்கள்! இப்படி எல்லாம் வேண்டி மனமுருகி அழைத்தால் கூட சில வீட்டிற்கு மகாலட்சுமி விரும்பி வருகை தருவது கிடையாது. இன்றளவும் நிறைய பேர் வீட்டில் பண கஷ்டம் வந்து கொண்டுதான் இருக்கின்றது. நம் வீட்டில் இருக்கக்கூடிய பணம் கஷ்டத்தை தீர்க்க இந்த ஒரு பொருளை நிலை வாசல் படியில் மாட்டி வைத்தால் போதும். இதில் எழும் சத்தத்திற்கு நீங்கள் மகாலட்சுமியை கூப்பிடா விட்டாலும் பரவாயில்லை! அவளே மனம் விரும்பி உங்கள் வீட்டிற்கு வருவாள். நம்முடைய வீட்டு வாசல் படியில் மாட்ட வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன, என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

nila-vasal

ஒரு வீட்டினுடைய நிலை வாசல் படி எப்படி இருக்க வேண்டும் என்பது அநேகமாக நமக்கு தெரிந்திருக்கும். எந்த ஒரு வீட்டின் நிலை வாசல் படியும் மஞ்சள் குங்குமப் பொட்டு இல்லாமல் இருக்கவே கூடாது. நிலை வாசல் படி என்பது வீட்டின் வெளிப்புறத்தில் இருப்பதால், அந்த நிலை வாசலில் தூசு தும்புகள் படத்தான் செய்யும். அதை வாரத்திற்கு ஒரு நாளாவது சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நிலை வாசல்படியில் சேரும் ஒட்டடையும் தூசும் கூட நம் வீட்டிற்கு கஷ்டத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்கள் நிலை வாசல் படியில் மரக்காலில் யாரும் ஆணி அடித்து விடக் கூடாது. அப்படியே உங்களுடைய வீட்டில் தெரியாமல் அறியாமல் ஆணி அடித்து வைத்திருந்தால், அந்த ஆணையை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் குழைத்து தடவி விட்டு விடுங்கள்.

நிலை வாசல் படிக்கும் உயிர் உண்டு. நிலை வாசல் படித்தான் நம் வீட்டு மகாலட்சுமி! நிலை வாசல் படி தான் நம் குல தெய்வம் என்று நினைப்பவர்கள் வீட்டில் நிச்சயமாக கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. சரி, நிலை வாசல் படியில் மாட்ட வேண்டிய அந்த ஒரு ரகசியப் பொருளை இப்போது பார்த்துவிடுவோம்.

- Advertisement -

கடலில் இருந்து எடுக்கக்கூடிய எல்லா பொருட்களுமே மகாலட்சுமிக்கு சொந்தமானது தான். ஏனென்றால் பாற்கடலை கடைந்தபோது பிறந்தவள் தான் மகாலட்சுமி. ஆக கடலிலிருந்து எடுக்கப்பட்ட சிற்ப்பியிலிருந்து, அலங்காரத்திற்காக செய்யப்படும் பொருட்களை தோரணமாக நிலை வாசல் படியில் மாட்டி வைப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

sirpi-thoranam1

சிற்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது, இயற்கையாகவே ஒருவிதமான சத்தம் எழும். இந்த சத்தம் உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் ஒலித்துக் கொண்டே இருந்தால், உங்களுடைய வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். மகாலட்சுமி விரும்பி வீட்டிற்குள் நுழைவாள் என்பது நிதர்சனமான உண்மை.

sirpi-thoranam

அந்தக் காலத்தில் எல்லாம் இந்த சிற்பியை கொண்டு அலங்காரம் செய்த அழகு பொருட்களை தோரணங்கள் போல் ஆங்காங்கே கட்டி வைத்திருப்பார்கள். காலப்போக்கில் இது மறைந்துவிட்டது. கடலில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த சிற்பி சம்பந்தப்பட்ட அழகு பொருட்கள், நிறைய கடலோரங்களில் இருக்கும் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் கட்டி பாருங்கள். நிச்சயமாக நல்ல மாற்றங்கள் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.