மதுவை பச்சை தண்ணீராக மாற்றும் அதிசய மூலிகை – வீடியோ

Nilamburandi mooligai

உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை இருக்கும் மரம், செடி, கொடி வகைகள் ஒரு வகையில் இறை தன்மை கொண்டது என நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். உணவையும், மரகட்டைகளையும் மனிதர்களுக்கும் இன்ன பிற உயிர்களுக்கும் தந்து அவ்வுயிர்கள் பலவற்றிற்கு வசிப்பிடமாகவும் இருக்கின்றது இந்த தாவரங்கள். இத்தாவரங்களில் ஒரு பிரிவான மூலிகைகள் பல நோய் தீர்க்கும் ஆற்றலையும் பல அற்புதங்களை புரியும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கின்றது. அந்த வகையில் மதுவை சுத்தமான நீராக மற்றும் அறிய மூலிகையை பற்றி இங்கு காண்போம்.

இயற்கை வளங்கள் அதிகளவு நிரம்பிய நாடுகளில் நம் பாரதமும் ஒன்று. இந்த நாட்டின் காடுகளிலும், மலைகளிலும் உலகில் வேறெங்குமே காண முடியாத பல அதிசய செடி, கொடி வகைகளும் மற்றும் மூலிகைகளும் உள்ளன. இந்த அதிசய மூலிகைகளில் பல எவ்வளவு கொடிய நோய்களையும் போக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்த மூலிகைகள் அனைத்தையும் பற்றி அறிந்து கொள்வதற்கு சித்த வைத்திய முறைகளில் ஒருவர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரும், யோகியுமான ஒரு நபர் பல அதிசய சக்திகளை தன்னுள் கொண்ட “நிலம் புரண்டி” மூலிகையின் மகிமைகளை விளக்குகிறார். அதாவது இந்த நிலம் புரண்டி மூலிகை தன்னை பூமிக்குள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் பார்வையில் படாதபடி வாழும் தன்மை கொண்ட மூலிகை என கூறுகிறார். இந்த மூலிகையை மாந்திரீக கலையில் பயன்படுத்தினால் பூமிக்கு கீழ் இருக்கும் பொருட்களை காணக்கூடிய சக்தியை ஒருவருக்கு அளிக்க வல்லது என்கிறார்.

மேலும் இந்த மூலிகைக்கு “ஆல்ககால்” எனப் படும் “எரிசாராயம் கலந்த மதுவை” பச்சை தண்ணீராக மாற்றக்கூடிய சக்தி இருப்பதாக கூறுகிறார். அதை நிரூபிக்க அந்த நிலம் புரண்டி மூலிகையை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, அதில் ஆல்ககால் கலந்த மதுவை தான் வழிபடும் சித்தரின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே ஊற்ற அந்த மது அந்த மூலிகையின் மீது பட்டவுடன், பச்சை தண்ணீராக மாறி இருப்பதை நாம் காண முடிகிறது. எதையும் செய்து காட்டும் சக்தி கொண்டது நம் நாட்டு தெய்வீக மூலிகைகள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

இதையும் பார்க்கலாமே:
2019 சுப முகூர்த்த நாட்கள்

இது போன்ற மேலும் பல ஆச்சர்யமிக்க வீடியோ பதிவுகளை பார்க்க எங்களோடு இணைந்திருங்கள்.