வாழ்க்கையில் நிம்மதியே இல்லாதவர்கள் இந்த ஒரு விஷயத்தை செய்தால் மன நிம்மதி கிடைக்கும்! அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்?

gopuram-rice
- Advertisement -

பணம் காசு எவ்வளவு இருந்தாலும் நிம்மதியை விலை கொடுத்து எவராலும் வாங்கிவிட முடியாது. நிம்மதி என்பது அனைவருக்கும் எளிதாக கிடைத்து விடுவது அல்ல. நல்ல எண்ணங்களும், நல்ல செயல்களும் ஒருவர் இடத்தில் இருக்கும் பொழுது தான் அவர்களுக்கு நிம்மதி உண்டாகிறது. இந்த என்பது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sad-crying4

எல்லோருடைய வாழ்விலும் நிம்மதி கிடைக்க என்னவெல்லாமோ பரிகாரங்களும், வேண்டுதல்களும் செய்வது உண்டு. எங்கு தேடியும் கிடைக்காத நிம்மதி இந்த ஒரு விஷயத்தை செய்வதால் கிடைக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியாது. நம் வாழ்வில் நிம்மதி இன்மைக்கு காரணம் பூர்வ ஜென்ம கர்மாக்கள் ஆக இருக்கலாம். கர்மாக்களில் இருந்து விமோசனம் பெற இந்த சில விஷயங்களை செய்து வந்தாலே போதும்.

- Advertisement -

எப்பொழுதும் கர்மாக்கள் நீங்க புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். அதைப் பெரிது பெரிதாக நாம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பதும், தண்ணீர் கொடுப்பதும் கூட புண்ணியம் தான். ஒரு சிலர் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் நிம்மதியைத் தேடி எவ்வளவு அலைந்தாலும் அது அவர்களுக்கு கிடைப்பது இல்லை. ஏதாவது ஒரு பிரச்சினையை மாறி மாறி அடுத்த அடுத்த கட்டங்களில் வந்து கொண்டே இருக்கும். எதுவுமே வேண்டாம் என்று வாழ்க்கையையே வெறுத்து விடுவார்கள். இது எல்லாம் உங்களுடைய கர்ம வினையின் பயன் பாடு தான்.

ant-erumbu

நிம்மதியான வாழ்க்கை அமைய எறும்பு புற்றுகளுக்கு பச்சரிசி மாவு கொடுக்கலாம். வட மாநிலங்களில் இது பெரும்பாலானவர்கள் கடைபிடித்து வரும் ஒரு ரகசிய பரிகாரம் ஆகும். எறும்பு புத்திற்கு உணவு கொடுப்பதன் மூலம் கர்மாக்கள் தீர்வதாக நம்பப்பட்டு வருகிறது. நம் முன்னோர்களின் பழக்க வழக்கத்தின் படி காலையில் எழுந்ததும் பச்சரிசி மாவில் கோலம் போடுவது வழக்கம்.

- Advertisement -

பச்சரிசி மாவு கொண்டு கோலம் போடும் பொழுது அதை உண்ண வரும் எறும்புகள் மூலம் நம்முடைய கர்மாக்கள் தீரும் என்பது ஐதீகம். இதன் காரணமாகத்தான் கடைகளில் விற்கும் சுண்ணாம்பு கோல மாவு வாங்குவதை விட வீட்டில் பச்சரிசி கொண்டு அரைத்த மாவை பயன்படுத்தி கோலம் போட்டால் நமக்கு புண்ணியம் வந்து சேரும். அது மட்டுமில்லாமல் எறும்புகளுக்கு உணவு கொடுத்து வருவதன் மூலமும் நம்முடைய கர்மாக்கள் குறையுமாம். இரும்பு மட்டுமல்ல எவ்வித ஜீவராசிக்கும் உணவு தண்ணீர் கொடுப்பதன் மூலம் நம்முடைய கருதுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்ட கூறுகிறது.

banana-for-cow

பசு மாடுகளுக்கு தீவனம் வைப்பது, நாய் பூனை போன்ற விலங்குகளுக்கு சாதம் வைப்பது, கிளி புறா காகம் போன்ற பறவைகளுக்கு தானியங்கள் தண்ணீர் கொடுப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தாலே நம்முடைய பாதி கர்மாக்கள் நீங்கி விடுமாம். கர்மாக்கள் நீங்க நீங்க நமக்கு நிம்மதி என்பது தானாகவே வந்து சேரும். உயிரினங்களுக்கு மட்டுமல்ல நம்முடன் பிறந்த மனித இனத்திற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தால் நிம்மதிக்கு குறைவிருக்காது.

- Advertisement -