- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்த காரியம் நடக்க ஆடி செவ்வாய் வழிபாடு

நினைத்த காரியம் நடக்க ஆடி செவ்வாய் வழிபாடு

- Advertisement -

நீண்ட நாட்களாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த காரியம் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்திலும், சொந்த வீடு அமைய வேண்டும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேண்டுதலுக்கும் ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சிறப்பான நாளாக அமைகிறது. இந்த நாளில் ஆடி மாதத்திற்குரிய அம்மனையும் செவ்வாய்க்கிழமைக்குரிய முருகனையும் ஒருசேர நாம் வழிபாடு செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நினைத்த காரியம் நடக்க வழிபாடு

ஒவ்வொரு மாதத்திற்கும் உகந்த தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த வகையில் ஆடி மாதத்திற்கு உகந்த தெய்வமாக அம்மன் திகழ்கிறார். ஒவ்வொரு கிழமைக்கும் உகந்த தெய்வமாக ஒவ்வொரு தெய்வங்கள் இருக்கும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படி பார்க்கும் பொழுது ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது அம்பிகை வழிபாட்டிற்கும் அதேசமயம் முருக வழிபாட்டிற்கும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரையும் ஒருசேர நாம் வழிபாடு செய்து விட்டோம் என்றால் இவர்கள் இருவரின் அருளாலும் நாம் நினைத்தது நினைத்தபடியே நடந்திடும். அதில் எந்தவித தடங்களும் ஏற்படாது.

- Advertisement -

சொந்த வீடு அமைய வேண்டும், கடன்கள் தீர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபடும் வழக்கத்தை வைத்திருப்போம். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை ஆடி மாதத்துடன் சேர்ந்து வரும் பொழுது இந்த முறையில் அம்மா பிள்ளை இருவரையும் சேர்த்து நாம் வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும். வேண்டியதை விரைவில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செய்வது என்பது மிகவும் சிறப்பு. குறைந்தபட்சம் மூன்று செவ்வாய்க்கிழமை செய்து விட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

இந்த வழிபாட்டை குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பெண்கள் தீட்டு சமயமாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக அசைவம் சாப்பிட்டிருக்க கூடாது. முழுமனதோடு அம்பிகையையும் முருகனையும் நினைத்துக் கொண்டு செய்யக்கூடிய இந்த வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் நாம் வேண்டியதை பெறச் செய்யும்.

- Advertisement -

முதலில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்பிகையை மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை அம்பிகையிடம் கூற வேண்டும். பிறகு அம்பிகையின் பின்வரும் மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும். அடுத்ததாக முருகப் பெருமானையும் மனதார நினைத்துக் கொண்டு முருகப் பெருமானுக்குரிய பின்வரும் மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும். திரும்பவும் உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

மந்திரம்

“ஓம் தும் துர்காயை நமஹ

- Advertisement -

ஓம் சரவணபவாய நமஹ”

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் ஆடி செவ்வாய் பரிகாரம்

எளிமையான இந்த வழிபாட்டு முறையை முழு நம்பிக்கையோடு முருகப்பெருமானையும் அம்பிகையும் இணைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்