சிறிய துண்டு படிகாரத்தை இப்படி ஒருமுறை, உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும். நிறைவேறாத லட்சியங்கள் நிறைவேறும். நினைத்த காரியம் நினைத்தபடி நல்லதாக நடக்கும்.

padikaram

நம் மனதில் நினைத்த விஷயங்கள் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால், அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு சில தாந்திரீக ரீதியான பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் நிச்சயமாக நமக்கு நல்ல பலன்கள் உண்டு. அந்த வரிசையில் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய நிறைவேறாத லட்சியம் நிறைவேற, ஆசைகள் நிறைவேற, நினைத்தபடி நல்ல வேலை கிடைக்க, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவில் நாம் பார்க்க கூடிய பரிகாரமும் சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரங்களில் ஒன்றுதான்.

sucess

இந்த பரிகாரத்தை கட்டாயமாக வாரம் தோறும் வரும் திங்கட் கிழமைகளில் செய்ய வேண்டும். உங்களுடைய நிறைவேறாத ஆசை நிறைவேறும் வரை செய்ய வேண்டும். ஒரே குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டு தான் இந்த பரிகாரத்தை, தொடர்ந்து செய்துவர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கும் படிகார கல்லை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்து, சூடுபடுத்தி கொள்ளவும். அதன் உள்ளே ஒரு சிறிய துண்டு படிகார கல்லை போட்டு விட்டு, சூடு படுத்தி கொள்ள வேண்டும். அந்த படிகார கல் சூடானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். உருகும் வரை விட்டுவிடாதீர்கள். படிகாரக்கல் சூடு ஆறிய பின்பு அதை உங்களுடைய வலது கையால் எடுக்க வேண்டும்.

monday

நீங்கள் கிழக்கு பார்த்தவாறு, உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று கொள்ளலாம். அமர்ந்தும் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். ‘நல்ல வேலை கிடைக்க வேண்டும். நீங்கள் நினைத்தபடி உங்களுக்கு பிடித்த கம்பெனியில், உங்களுக்கு பிடித்த போஸ்டிங் கிடைக்க வேண்டும். திருமணம் நடக்கவேண்டும். லட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்’. இப்படி உங்களுடைய குறிக்கோள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கட்டாயம் ஒரே ஒரு குறிக்கோளாக தான் இருக்க வேண்டும்.

உங்கள் மனதில் இருக்கும் குறிக்கோளை இந்த பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு சொல்லி, உங்கள் கையில் வைத்திருக்கும் படிகார கல்லை ஏழுமுறை உங்களுடைய தலையை வலது புறமாக சுற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இதை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சாக்கடையில் தூக்கிப் போட்டுவிட வேண்டும். வீட்டின் அருகில் சாக்கடை இல்லை என்றால் குப்பை கூளங்கள் உள்ள இடங்களில் இதை தூக்கி போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.

padikaram

இந்த பரிகாரத்தை தொடர்ந்து வரக்கூடிய திங்கட்கிழமை அன்று செய்ய வேண்டும். எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது உங்களுடைய இஷ்டம் தான். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குறிப்பாக உச்சிப் பொழுது என்று சொல்லப்படும் 12 மணி நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இந்த பரிகாரத்தை திங்கட்கிழமைகளில் செய்து வரும் பட்சத்தில், சில வாரங்களில் உங்களுடைய வேண்டுதல், குறிக்கோள் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.