நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா? தினமும் இந்த 2 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்!

vetti-ver

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகத்தான் இருக்கும். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள், வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் கட்டாயம் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும். சுகபோக வாழ்க்கையை வாழும் சமயத்தில், ‘நம்முடைய வாழ்க்கை நன்றாகத்தானே இருக்கிறது!’ என்ற எண்ணத்தில் நாம் செய்யும் தவறுகள், நமக்கான பாடத்தை வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் உணர்த்திவிடும். இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்வார்கள்! ‘மேலே இருப்பவர்கள் கீழே வந்துதான் ஆகவேண்டும். கீழே இருப்பவர்கள் எப்போதுமே கீழ் நிலையிலேயே இருப்பதுமில்லை.’  ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த வாழ்க்கையை நாம் எப்படி நிறைவோடு வாழ்வது? நினைத்த காரியத்தை எப்படி முடித்துக் கொள்வது? என்பதற்கான விடையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Astrology

முடிந்தவரை நம்முடைய வாழ்க்கை நிலைமையானது எப்படி இருந்தாலும், பாவச் செயல்கள் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் முடிந்தவரை தங்களுடைய பாவச் செயல்களை குறைத்துக் கொண்டாலும், சூழ்நிலை ஏதாவது ஒரு ரூபத்தில், பாவத்தை செய்ய வைக்கிறது! என்று சொன்னால் அது பொய்யாகாது. இன்று கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், நேற்று பாவம் செய்தவர்கள் தான். இன்று சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் நேற்று நல்லது செய்பவர்கள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இவைகளையெல்லாம் வைத்துதான், ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று சொன்னார்களோ நம் முன்னோர்கள்.

சரி. எது எப்படியாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையில், மனதில் நினைத்ததை, நல்ல வழியில் நிறைவேற்றிக் கொள்ள பலவகையான வழிமுறைகள் இருந்தாலும், இன்று இரண்டு வழி முறைகளை மட்டும் நாம் தெரிந்து கொள்ளலாம். தினம்தோறும் காலையில் நான் குளிக்கும் போது முதலில் வெட்டி வேர் பொடி கலந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். அதன் பின்பு சாதாரண தண்ணீரை ஊற்றி குளித்துக் கொள்ளலாம். இந்த வெட்டிவேர் தண்ணீரை தினம்தோறும் நம் மேல் ஊற்றி குளிக்கும் போது, நமக்கு செல்வம் வர தடையாக இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அது நாம் செய்த கர்ம வினையாக இருந்தாலும், நீங்கும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. 1/2 ஸ்பூன் வெட்டிவேர் பொடி தண்ணீரில் கலந்தால் போதும்.

vetiver

அடுத்ததாக, தினம்தோறும் ஒரு சின்ன பயிற்சியை செய்ய வேண்டும். நம்முடைய மனதில் ஒரு காரியத்தை, நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆழமாக நினைத்துக் கொண்டே இருந்தால், அது நிச்சயமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆனால், அது கட்டாயம் நல்ல காரியமாக இருக்க வேண்டும். நம்முடைய உடம்பில் ஒரு இடத்தை 15 வினாடிகள் அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில், நம் மனதில் நினைத்த காரியத்தை விரைவில் நிறைவேற்றிக் கொள்ளலாம். அது எந்த இடம்?

- Advertisement -

நம்முடைய இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள மூக்குப் பகுதி தான் அது. உங்களுடைய கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து குறிப்பிட்ட இந்த பகுதியை, 15 வினாடிகள்(secands) அழுத்தம் கொடுக்கும் போது, உங்களுடைய எண்ண அலைகள், பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு, தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்முடைய எண்ண ஓட்டங்களை அதிகப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை தூண்டுவதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும்.

nose-yoga

இந்த பயிற்சியை தொடர்ந்து 48 நாட்கள் செய்து பார்த்தாலே உங்களுக்கு நல்ல பலன் இருப்பதை உணரலாம். 10 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். நீங்கள் உங்களுடைய மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த காரியமானது கர்மவினையை யும் தாண்டி, கட்டாயம் இந்த பயிற்சியின் மூலம் அதை வெற்றி பெற செய்யலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன்! சுலபமான பயிற்சி. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த உலகத்தில் நாமும் காலூன்றி நிற்க வேண்டும் என்றால், நம்முடைய செயல்பாடுகளும் சுறுசுறுப்போடு தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் தேவையே இல்லாமல் வரும் சண்டை சச்சரவுக்கு தீர்வு தரும் பரிகாரம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ninaithathu niraivera enna seiya vendum. Ninaithathu niraivera. Ninaithathu nadakka Tamil. Ninaithathu nadakka pariharam. Ninaithathu niraivera tips.