இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். இந்த உலகமே உங்கள் பேச்சுக்கு தலையாட்டும். நினைத்ததை நினைத்த மாத்திரத்திலேயே சாதித்துக் கொள்ளலாம்.

thilagam

இந்த உலகமே உங்கள் பேச்சைக் கேட்டு தலையாட்ட வேண்டும் என்றால், நீங்கள் கடவுளாகத் தான் மாற வேண்டும். அது முடியாது. கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். வெளியே செல்லும் போது நம்மை சுற்றி இருப்பவர்கள், நம் வீட்டில் இருக்கும் போது நம்முடைய உறவினர்கள், நான் வேலை செய்யும் இடத்தில் நமக்கு கீழே வேலை செய்பவர்கள், நமக்கு மேலே வேலை செய்பவர்கள் இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் நாம் சொல்வதைக் கேட்டு நடந்தாலே போதும். நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம் அல்லவா. இப்படி நீங்கள் திரும்பிய பக்கம் உள்ளவர்கள் எல்லாம், உங்கள் பேச்சை கேட்டு நடந்தால், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தால், நிச்சயம் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையத்தான் செய்யும்.

pachai-karpooram

உங்கள் விருப்பம் போல் அனைத்தும் நடக்க ஒரு வசிய திலகத்தை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றித் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வசிய திலகம் என்றதுமே யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்த திலகத்தை தயார் செய்து நெற்றியில் வைத்துக் கொண்டால், நீங்கள் வெளியே செல்லும் காரியம் வெற்றி அடையும்.

எல்லோருக்கும் பிடித்த மனிதராக உங்களை மாற்றக் கூடிய சக்தியும் இந்த திலகத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. சரி, அந்த திலகத்தை எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள் என்னென்ன? ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம், வெட்டிவேர், தர்பை புல், ஜாதிக்காய் பொடி, ஜவ்வாது, கோரோசனை. எல்லாப் பொருட்களிலும் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தயாராக  வைத்துக் கொள்ளுங்கள்.

Jathikkai

இதை ஒரு மண் பாத்திரத்தில் செய்வது நல்லது. மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம் உங்களுடைய வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. அகல் விளக்கில் கொஞ்சம் பெரியதாக இருக்கக்கூடிய விளக்கையும் இந்த திலகம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். அகலமான மண் விளக்கில் மேல் சொன்ன பொருட்களை எல்லாம் வைத்து, அதன் மேலே பச்சை கற்பூரத்தை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பற்ற வைத்து விடுங்கள்.

இந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாக உங்களுக்கு கிடைக்கும். அந்த சாம்பலை எடுத்து நன்றாக தூள் செய்து, அதில் கொஞ்சமாக நெய் ஊற்றி குழைத்தால், கருப்பு திலகம் கிடைத்து விடும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் வெளியே செல்லும்போது ஒரு சொட்டு இதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

mai

அப்படி இல்லை என்றால் ஒரு சொட்டு இதை எடுத்து உச்சந் தலையில் லேசாக தடவிக்கொண்டு, வெளியே சென்றால் போதும். நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றியாக முடியும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும். எந்த ஒரு விஷயத்தையும் தொடங்கி அது சரியாக நடக்கவில்லை, தோல்வியில் முடிந்தது என்ற பிரச்சனை உங்கள் பக்கம் வராது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.