- Advertisement -

எனக்கான சிறு கனவுகளும்
அதை நோக்கிய பயணமுமே
நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில்
கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து
களைந்து சென்றாய் மழை மேகமாய்..

Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
என் காதலின் தவிப்பு – காதல் கவிதை

- Advertisement -

காதலோடு நாம் காலத்தை ஒப்பிடலாம். சில மாதங்கள் குளிக்காலமும் சில மாதங்கள் மழை காலமும் இன்னும் சில மாதங்கள் வெயில் காலமும் இருப்பது போல காதலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். ஆரபம்ப காலத்தில் அது குளிர்காலம் போல ஜில் என்று இருக்கும். அதன் பிறகு சில சில சண்டைகளால் அது வெயில் காலம் போல வறண்டு இருக்கும். அந்த வெயில் காலம் மீண்டும் குளிர் காலமாக மாறுவதும் அல்லது மழை காலமாக மாறுவதும் காதலர்கள் கையில் தான் உள்ளது.

ஒரு வேலை அது மழை காலமாக மாறினால், காதலர்களின் கண்களில் எப்போதும் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும். அந்த ஒவ்வொரு துளியும் ஓராயிரம் வலிகளை சுமந்துகொண்டு கண்கள் என்னும் கரையை தாண்டி கீழே இறங்கும். ஆகையால் எப்போதெல்லாம் சண்டை வருகிறதோ அப்போதெல்லாம் காதலர்கள் விட்டு கொடுத்து செல்வது தான் அவர்களுக்கும் அவர்களின் காதலுக்கும் நல்லது.

Love Kavithai

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -