என் காதலின் தவிப்பு – காதல் கவிதை

Kadhal kavithai

உன்னோடு நான் பேசுகையில்
உதடவில் சொல்கிறேன்
நான் நலன் என்று..
ஆனால் உன்னை தினம் தினம்
காண துடிக்கும்
என் கண்களுக்கு தான் தெரியும்..
என் காதலின் தவிப்பு..

kadhal kavithai Image
kadhal kavithai Image

இதையும் படிக்கலாமே:
நீ தந்த பரிசு- காதல் கவிதை

காதலிக்கும் அனைவரும் தன் காதலனையோ காதலியையோ தினம் தினம் கண்டு ரசிக்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்கள் என்று வந்துவிட்டால் போதும். இவர்கள் படும் துன்பங்கள் ஏராளம். குறிப்பாக புது காதலர்களுக்கு இது ஒரு நரக வேதனை என்று கூட கூறலாம்.

வீட்டில் ஏதோ ஒரு பொய்யை சொல்லிவிட்டு எப்படியாவது தன் காதலனையோ காதலியையோ காண செல்லும் பல லட்சம் காதலர்கள் நம் நாட்டிலும் உண்டு. வீட்டில் இருப்பவர்களை விடுங்கள், நெருங்கி நண்பர்களிடமே கூட பல பொய்களை கூறிவிட்டு செல்வார்கள் பலர். காதலுக்கு கண்கள் இல்லை என்று கவிஞ்சர்கள் பலர் கூறியதற்கு இதெல்லாம் ஒரு சிறிய சான்று தான்.

Love kavithai Image
Love kavithai Image

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.