நம்முடைய வீட்டை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை துரத்தியடிக்க, வெள்ளிக்கிழமை அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும்.

deepam11

நம்முடைய வீட்டை பிடித்திருக்கும் தரத்தையும், பீடையையும் அடித்து விரட்டுவதற்கு ஆன்மீக ரீதியாக, சாஸ்திரத்தில் எத்தனையோ வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஒரு சுலபமான மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு வழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தீராத பண கஷ்டம் உள்ளது, கடன் பிரச்சனை உள்ளது, கையில் வருமானம் இல்லை. வருமானம் வந்தாலும் அதை சேமிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஒருமுறை இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றி பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனை பெற முடியும்.

nithya-kalyani2

இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கப்போவது நித்தியகல்யாணி பூவை பற்றிய மகத்துவத்தை தான். நித்தியகல்யாணிப் பூ என்றதுமே பல பேருக்கு பயம் வந்துவிடும். இது சுடுகாட்டில் விளையக்கூடிய பூ என்று! இது சுடுகாட்டில் அதிகமாக வளரக்கூடிய பூ தான். ஆனால் இதை சுடுகாட்டுப் பூ என்று நாம் அனைவரும் ஒதுக்கி வைக்கக் கூடாது.

இந்த நித்தியகல்யாணி பூவுக்கு மருத்துவ ரீதியாக பல மகத்துவங்கள் உண்டு. இதேபோல் ஆன்மீக ரீதியாகவும் இந்த நித்திய கல்யாணி பூவுக்கு நிறையவே சக்தி உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பூ சுடுகாட்டில் அதிகம் விளைவதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது சாம்பல் சத்து நிறைந்த இடத்தில் இந்த நித்தியகல்யாணிப்பூ படர்ந்து காணப்படும். சுடுகாட்டில் சாம்பல் நிறைந்த இடங்களில் இந்த பூ தானாக வளரும். இதனால் கூட இதற்கு சுடுகாட்டுப் பூ என்ற ஒரு பெயர் வந்திருக்கலாம் என்பது சிலருடைய கூற்றாக இருந்து வருகிறது.

nithya-kalyani

சரி, எது எப்படியாக இருந்தாலும் இந்த பூவுக்குள் லட்சுமி கடாட்சம் நிறைந்து உள்ளது என்பதும், இந்த பூவினை நம் வீட்டில் வளர்த்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கும் என்பதும் உண்மையான ஒரு விஷயம். தாராளமாக நித்தியகல்யாணி பூச்செடி உங்களுடைய வீட்டின் முன் வாசல் பக்கத்தில் வைத்து வளர்த்து வரலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் நித்திய கல்யாணி பூ ஒன்றை போட்டு அதனுள்ளே ஒரு கிராம்பை போட்டு பஞ்சு திரி போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது வழக்கம் போல உங்களுடைய வீட்டில் இருக்கும் தீபங்களை ஏற்றி வையுங்கள். கூடவே இந்த ஒரு தீபத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து ஏற்றும் பட்சத்தில் வீட்டில் இருக்கக் கூடிய வறுமை விரட்டி அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

nithya-kalyani-lakshmi

இதோடு மட்டுமல்லாமல் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நித்தம் நித்தம் உங்களுடைய வீட்டில் பல நன்மைகள் நடந்து கொண்டே வரும். மூன்று வெள்ளிக்கிழமைகள் இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி தான் பாருங்களேன். வீட்டில் மகாலட்சுமி நிலையாகக் குடி கொண்டு விட்டால் பின்பு வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.