ஞாபக சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்

memory power siddha maruthuvam

ஞாபக சக்தி என்பது ஒரு மனிதனுக்கு அதிகம் இருப்பதே நல்லது. ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு கூறுகிறது. ஒரு மனிதனின் மூளையானது சிறப்பாக செயல்படவும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

memory power

குறிப்பு 1 :
வல்லாரை கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நியாபக சக்தி பெருகும். தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள முடியாதவர்கள் வல்லாரை கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் பொடியை பாலில் கலந்து உண்டு வந்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஞாபக சக்தி பெருகும்.

குறிப்பு 2 :
வல்லாரை இலை, துளசி இலை ஆகிய இரண்டையும் 70 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதோடு அதிமதுரம், சீரகம், சுக்கு, திப்பிலி, வசம்பு , ஓமம், கரி மஞ்சள், மர மஞ்சள், கோஷ்டம், இந்துப்பு ஆகிய ஒவ்வொன்றையும் 35 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் அரை ஸ்பூன் பொடியை பசுநெய்யில் கலந்து உன்ன வேண்டும். அதே போல இரவும் அரை ஸ்பூன் பொடியை பசும்பாலில் கலந்து உன்ன வேண்டும். இதன் மூலம் இரண்டு மாதங்களுக்குள் ஞாபகமறதி முற்றிலும் நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்க செய்யும்.

vallarai keerai

குறிப்பு 3 :
மாதுளை பழத்தை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதே போல கோரை கிழங்கை பொடி செய்து தேனில் கலந்து உண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும்.

குறிப்பு 4 :
அரை டம்ளர் பாலில் அரை டம்ளர் கேரட் சாறு சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

carrot juice

குறிப்பு 5 :
தேங்காய் பால், பாதம் போன்றவற்றை தினமும் உண்ணலாம். அதே போல தூதுவளை இலையை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
இரவில் நன்கு தூக்கம் வர கை வைத்தியம்

குழந்தைகளுக்கு நியாபக சக்தி குறைவாக இருந்தால் அவர்கள் இரவில் நன்கு தூங்க வேண்டும். வெண்டைக்காய், துளசி இலை போன்றவற்றை உண்டு வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.